'கேத்தே பசிபிக்' ஏர்லைன்ஸ் விமானம் வழக்கமாக தினமும் நள்ளிரவு 12:40 மணிக்கு ஹாங்காங்கிலிருந்து சென்னைக்கு வந்து பின்னர் மீண்டும் அதிகாலை 2 மணியளவில் சென்னையிலிருந்து ஹாங்காங் புறப்பட்டுச் செல்லும். இந்த விமானத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்ததால், 420 பேர் பயணிக்கத்தக்கதாக போயிங் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
ஆனால், கொரானா வைரஸ் தாக்கத்தால் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவந்தது. இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னையிலிருந்து ஹாங்காங் செல்லவிருந்த விமானத்தில் 14 பேர் மட்டுமே பயணம் செய்தனர். அதைபோல் ஹாங்காங்கிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய பயணிகளும் மிகக்குறைவாகவே வந்தனர்.
இதைத் தொடர்ந்து, விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டன. மேலும், ஹாங்காங் செல்லவிருந்த 14 பயணிகளையும் இலங்கை வழியாக ஹாங்காங் சென்ற மாற்று விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டது. நாளை விமானம் இயக்கப்படுமா? என்பது பயணிகள் எண்ணிக்கைகளை பொறுத்து முடிவு செய்யப்படும் என்று அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் பாதிப்பு: ஈரானில் இருவர் உயிரிழப்பு