இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதச்சார்பின்மை தான் இந்தியக் கோட்பாடு என்கிறது நம் அரசியலைமைப்புச் சட்டம். பதவி உயர்வில், பட்டியலினத்தோர், மலைவாழ் மக்களுக்கு இருக்கும் இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீடு கூடாது என சட்ட விரோத தீர்ப்பையே கூட நீதிபதிகள் அளித்திருக்கிறார்கள். எனவே, சமூக நீதி என்பது தவிர்க்க முடியாததாகிறது.
சமூகநீதியை நிலை நாட்டுவதற்காகத் தான் தந்தை பெரியார் அன்றே விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தினார். வேலைவாய்ப்பில் சாதிக் கணக்கிற்கேற்ப இட ஒதுக்கீடு என்பதாகும். சமூக நீதியை இந்தியாவிற்கு அறிமுகம் செய்த தமிழ்நாடும், மோடியின் தடாலடிகளைத் தட்டிக் கேட்பதில்லை. காரணம் மோடியின் ஆட்களே ஆட்சியாளராக இருப்பதுதான்.
மகாராஷ்டிரா, பீகார் போன்ற இடங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவோடு சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோன்று தமிழ்நாட்டில் வருகின்ற 2020- 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கை இருக்கிறது. அதில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
சாதி சமூகமே இந்தியா என்கின்ற போது, சமூகநீதி தவிர்க்க முடியாததாகிறது. எனவே தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசையும் தீர்மானம் நிறைவேற்றக் கூறுகிறது வாழ்வுரிமைக் கட்சி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வட சென்னையை சேர்ந்த நான்கு பேருக்கு கரோனா!