ETV Bharat / state

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம்... ஓபிஎஸ் உட்பட பலர்மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்கு - Rayapetta AIADMK Head Office

அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்தப் புகாரின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல அதிமுகவினர் மீது ராயப்பேட்டை போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 25, 2022, 8:24 PM IST

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 11ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்றபோது, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாகியது.

அப்போது அதிமுக அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அலுவலகத்தில் இருந்து கட்சி நிதி, வங்கி ஆவணங்கள், சிபியு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றார்.

இச்சம்பவம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி. சண்முகம் கடந்த 23ஆம் தேதி ராயப்பேட்டை காவல் நிலையத்தில், அதிமுக அலுவலகத்தை சூறையாடியதுடன் பொது சொத்துகளை சேதப்படுத்திய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலர் மீது ராயப்பேட்டை போலீசார் கொலை மிரட்டல், கலகம் செய்தல், பொது சொத்தை சேதப்படுத்துதல், நம்பிக்கை மோசடி, சொத்துகளைத் திருடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் இன்று (ஆக.25) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராயப்பேட்டை அதிமுக அலுவலக கலவரச்சம்பவம், அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த அனைத்து வழக்குகளும் சிபிசிஐடி-க்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.