ETV Bharat / state

அம்மா உணவகத்தை சூறையாடிய இருவர் மீது புகார்!

சென்னை: முகப்பேர் அம்மா உணவகத்தில் ரகளையில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

mugapaer
முகப்பேர்
author img

By

Published : May 4, 2021, 3:26 PM IST

சென்னை முகப்பேர் பட்டினத்தார் சாலையில் அம்மா உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை, உணவகத்திற்கு வந்த இரண்டு நபர்கள், அங்கிருக்கும் ஊழியர்களிடம் ஆட்சி மாறிபோச்சு இன்னமும் அம்மா உணவகம் பெயர் மாற்றாமல் இருக்கிறீயா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, உணவக பெயர் பலகை, ஜெயலலிதா புகைப்படத்தை அடித்து நொறுக்கினர். அங்கு உணவிற்காக வைத்திருந்த காய்கறிகளையும் கீழே தள்ளி நாசம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து, உணவக ஊழியர்களும், பொதுமக்களும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெ.ஜெ நகர் காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.

மேலும், அம்மா உணவகத்தில் ரகளையில் ஈடுபட்ட இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். அவர்கள் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

இதற்கிடையில், இவ்விவகாரம் திமுக தலைமையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, திமுக தலைமை பெயர் பலகையை உடனடியாக சீரமைக்குமாறு உத்தரவிட்டது மட்டுமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.