சென்னை: திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன். இவர் விமானங்களில் அறிவிக்கப்படும் அவசரகால அறிவிப்புகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.
அதில். “அவசர காலங்களில் பயணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், விமானத்திலிருந்து தப்பிக்க அவசர வழி எங்கிருக்கிறது?
23 மொழிகளில் விமான அறிவிப்புகள்?
ஆக்சிஜன் குறைபாட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டால், தற்காலிக ஆக்சிஜன் முகக்கவசம் பயன்படுத்தும் முறைகள், சீட் பெல்ட் அணியும் முறைகள், நீர்நிலைகளில் விழுந்தால் தப்பிக்க விமானத்தில் அதற்கான பிரத்யேக ஆடைகள் இருக்கும் இடம் மற்றும் அணியும் முறை குறித்த செயல்முறை விளக்கங்கள் ஆகியவை விமானம் புறப்படுவதற்கு முன்பாக வழங்கப்பட்டுவருகின்றன.
அவ்வாறு தற்போது வெளியிடப்படும் அறிவிப்புகள் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. நாட்டின் மக்கள் தொகையில் 50 விழுக்காடு மக்கள் மட்டுமே ஆங்கிலமும், இந்தியும் தெரிந்தவர்கள்.
அவசர காலத்திற்கான இன்றியமையாத விளக்கங்கள் மக்களுக்குப் புரிகிற மொழியில் இருக்க வேண்டும் என்பதால், பயணிகள் பாதுகாப்பு கருதி, பாதுகாப்பு அறிவிப்புகள், விளக்கக் கையேடுகளை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அட்டவணை எட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், அசாமி, குஜராத்தி, பெங்காலி, காஷ்மீரி, உள்ளிட்ட 23 மொழிகளிலும் வழங்க வேண்டும்.
இந்திய நிறுவனங்களால் நடத்தப்படும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ் ஜெட், கோ ஏர், இண்டிகோ, ஏர் ஏசியா, டாட்டா விஷ்ட்டா ஆகிய விமானங்களில் இதை நடைமுறைப்படுத்தப்படுவதுடன், விமானம் புறப்படும், விமானம் சென்றடையும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்க-சீனா இடையேயான போட்டி மோதலாகாது - வெள்ளை மாளிகை