ETV Bharat / state

கனிமொழி, கதிர் ஆனந்த் மீதான வழக்கு - உயர்நீதிமன்றம் தள்ளுபடி - DMK Candidates Kanimozhi and kathir Anand

சென்னை: திமுக வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதியிழப்பு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

kanimozhi-and-kathir-anand
author img

By

Published : Apr 16, 2019, 6:34 PM IST

ராமநாதபுரம் கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மக்களவை தேர்தலை சட்டப்படியும், நியாயமான முறையிலும் நடத்த தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுதிகளுக்கும் பறக்கும் படைகள், சிறப்புக்குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. தேர்தலில் தங்களுக்கு சாதகமாக வாக்களிப்பதற்காக வேட்பாளர்கள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைத்திருந்த கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக பலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக, அக்கட்சியின் மகளிரணி செயலர் கனிமொழி போட்டியிடுகிறார். அவருக்காக கோவில்கள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் பரப்புரைக் கூட்டங்களில் வாக்காளர்களுக்கு நூதன முறையில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்துவருகின்றனர். மார்ச் 27ஆம் தேதி வேப்பலோடை கிராமத்தில் கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டன.

இது தொடர்பாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சார்பிலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. கதிர்ஆனந்த் வீடு உள்ளிட்ட இடங்களிலும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கதிர் ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரின் செயல்பாடுகள் ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் மத்தியில் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்க செய்துள்ளது. இவர்கள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி தேர்தல் நடைமுறைகளை கேலிக் கூத்தாக்குவதுடன், பணம் இருந்தால் வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என்ற தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். எனவே கனிமொழி, கதிர்ஆனந்த் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதியிழப்பு செய்யக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி மனு அனுப்பினேன்.

இதுவரை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மனு அடிப்படையில் இருவரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதியிழப்பு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுவதாக தெரிவித்தார். இதனைப் பதிவு செய்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Intro:Body:

திமுக வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதியிழப்பு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 ராமநாதபுரம் கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

மக்களவை தேர்தலை சட்டப்படியும், நியாயமான முறையிலும் நடத்த தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுதிகளுக்கும் பறக்கும் படைகள், சிறப்புக்குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

தேர்தலில் தங்களுக்கு சாதகமாக வாக்களிப்பதற்காக வேட்பாளர்கள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைத்திருந்த கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக பலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக, அக்கட்சியின் மகளிரணி செயலர் கனிமொழி போட்டியிடுகிறார். அவருக்காக கோவில்கள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் பிரச்சாரக் கூட்டங்களில்  வாக்காளர்களுக்கு நூதன முறையில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். மார்ச் 27-ல் வேப்பலோடை கிராமத்தில் கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கனிமொழி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சார்பிலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. கதிர்ஆனந்த் வீடு உள்ளிட்ட இடங்களிலும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கதிர் ஆனந்த் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரின் செயல்பாடுகள் ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறையில்  நம்பிக்கை வைத்துள்ளவர்கள் மத்தியில் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்க செய்துள்ளது.

இவர்கள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி தேர்தல் நடைமுறைகளை கேலிக்  கூத்தாக்குவதுடன், பணம் இருந்தால் வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என்ற தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் தேர்தல் நடைமுறைகளை காற்றில் பறக்கவிட்டு ஜனநாயகத்தின் ஆணிவேரான தேர்தல் நடைமுறைகளை சீர்குலைக்க செய்து மக்களவைக்குள் நுழைய முயலும் கனிமொழி, கதிர்ஆனந்த் ஆகியோரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதியிழப்பு செய்யக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 5 ஆம் தேதி  மனு அனுப்பினேன்.

இதுவரை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மனு அடிப்படையில் கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதியிழப்பு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடை பெறுவதாக தெரிவித்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.