ETV Bharat / state

ஜெயிலில் சிக்கன் மசாலா குறைவு என கொலை மிரட்டல்; போலீஸ் பக்ருதீன் மீது வழக்குப் பதிவு!

புழல் சிறையில் பெப்பர் சிக்கன் மசாலா குறைவாக இருந்ததால் துணை ஜெயிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த பயங்கரவாதி போலீஸ் பக்ருதீன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

chennai
சிக்கன் மசாலா குறைவு என கொலை மிரட்டல்
author img

By

Published : May 13, 2023, 3:37 PM IST

சென்னை: அத்வானியை கொலை செய்ய முயன்ற வழக்கு, மதுரை மேம்பாலத்தின் அடியில் குண்டு வைத்த வழக்கு, ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு, புழல் ஜெயிலில் தான் இருந்த சிறையில் சிறைத் துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்வதாகக் கூறி சிறை ஊழியர்களை தாக்கிய வழக்கு என மொத்தம் 16 வழக்குகளில் தொடர்புடையவர், பயங்கரவாதி போலீஸ் பக்ருதீன்.

இதுபோன்று பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி போலீஸ் பக்ருதீனை கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்பொழுது போலீஸ் பக்ருதீனை புழல் சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் அடைத்துள்ளார். இந்நிலையில் நேற்று போலீஸ் பக்ருதீன் புழல் சிறையில் உள்ள பிசிபி (prison cash purchase) கேண்டீனில் பெப்பர் சிக்கன் மசாலா கேட்டுள்ளார்.

உடனே சிறைக்காவலர்களும் அவருக்கு சிக்கன் மசாலாவைக் கொடுத்தனர். அப்போது சிக்கன் மசாலா குறைந்த அளவில் உள்ளதாகவும், தனக்கு அதிகமான மசாலா தருமாறும் பக்ருதீன் சிறைக்காவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு சிறைக்காவலர்கள் எதுவாக இருந்தாலும் சிறை துணை ஜெயிலரிடம் கேட்குமாறு தெரிவித்துள்ளனர்.

உடனே போலீஸ் பக்ருதீன், துணை ஜெயிலர் கவிபாரதியிடம் சென்று, தனக்கு சிக்கன் மசாலா அதிகம் தேவை எனக் கூறி தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. உடனே ஜெயிலர் கவிபாரதி தற்பொழுது மசாலா குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பக்ருதீன் தனக்கு மசாலா கொடுக்கவில்லை என்றால், உன்னை கொலை செய்து விடுவேன் என அனைவரின் முன்பும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் பதறிப்போன துணை ஜெயிலர் உடனே சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜிடம் சென்று நடந்தவற்றைக் கூறி பயங்கரவாதி போலீஸ் பக்ருதீன் மீது புகார் அளித்துள்ளார். புழல் காவல் நிலையத்தில் அவர் அளித்தப் புகாரின் அடிப்படையில், சிறை கண்காணிப்பாளர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புழல் சிறையில் உள்ள கேண்டீனில் இருக்கும் அனைத்து உணவுப் பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: திருமண ஊர்வலத்தில் பெட்ரோல் குண்டு; தவறை தட்டிக்கேட்டதால் இளைஞர் வெறிச்செயல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.