ETV Bharat / state

தமிழ்நாட்டை சேர்ந்த இருதய டாக்டருக்கு ஜெர்மனியின் மதிப்புமிக்க விருது!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இருதய மருத்துவரான டாக்டர். ஆர். அரவிந்த்குமாருக்கு ஜெர்மனியின் மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த இருதய டாக்டருக்கு ஜெர்மனியின் மதிப்புமிக்க விருது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 9:11 PM IST

சென்னை: இந்திய-ஜெர்மன் இருதய நோய் நிபுணர் ஒருவருக்கு மதிப்புமிக்க விருது மற்றும் பயிற்சி பெல்லோஷிப்பை European Association of Percutaneous Cardiovascular Interventions EAPCI(ESC) என்ற அமைப்பு வழங்கி உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ஆர். அரவிந்த்குமார் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டதில் S.M.H ராணிப்பேட்டை (SIH-R & LC) மற்றும் கரிகிரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றினார்.

2013ஆம் ஆண்டு முதுகலை படிப்பதற்காக ஐரோப்பா சென்றார். அங்கு தனது இருதயவியல் பயிற்சி மற்றும் இதய செயலிழப்பு பெல்லோஷிப்பை ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் லண்டன், இங்கிலாந்தில் உள்ள ராயல் ப்ரோம்ப்டன் மருத்துவமனையில் நிறைவு செய்தார். இந்நிலையில் ஜெர்மனியின் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான EAPCI விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.

EAPCI விருது என்பது குறிப்பிட்ட துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், 40 வயதிற்குட்பட்ட இருதயநோய் நிபுணர்கள், அந்நாட்டின் குடிமக்கள், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு மட்டுமே ESC உடன் இணைந்த இருதயவியல் சங்கங்கள் வழங்கபட்டு வருகிறது.

ஜெர்மனியின் சார்பாக இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ஆர். அரவிந்த்குமார் இந்த மதிப்புமிக்க விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த விருதிற்காக இவருக்கு 25ஆயிரம் யூரோ பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை, பேஸ்மேக்கர் மற்றும் ஸ்ட்ரக்சுரல் நடைமுறைகளில் பயிற்சிப் பெறுகிறார்.

டாக்டர். அரவிந்த், இருதய நோய்கள், HTN, DM மற்றும் Covid ஆகியவற்றைப் பொது சுகாதார கல்வியறிவு, ரோட்டரி கிளப், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, SRFO மற்றும் "லெட்ஸ் ஃபோகஸ் ஹெல்த் குரூப் அண்ட் ஹார்வெஸ்ட் ஃபவுண்டேஷனுடன் இணைந்து சமுதாய முன்னேற்றத்திற்காக பல வலைப்பயிற்சிகள், விரிவுரைகள், திரையிடல் மற்றும் மருத்துவ முகாம்களை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 6 எம்.பி.பி.எஸ், 122 பி.டி.எஸ் மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளது... மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.