ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக கார் டிரைவர் வெட்டிக் கொலை! - முன்விரோதம்

சென்னை: வில்லிவாக்கத்தில் முன்விரோதம் காரணமாக கார் டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

car driver murder
author img

By

Published : Sep 10, 2019, 11:19 AM IST

சென்னை வில்லிவாக்கம் பாலராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் கார் ஓட்டும் பணியைச் செய்து வந்தார். இந்நிலையில், பாஸ்கரன் நேற்றிரவு வழக்கம்போல் கார் ஓட்டும் தொழிலை முடித்து விட்டு சிந்தாமணி நியாயவிலைக் கடை அருகே தனது வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவரை மறைமுகமாக பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் பாஸ்கரின் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்தனர்.

நிலை தடுமாறி பாஸ்கரன் கிழே விழுந்த போது, அவரின் முகம் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் கத்தியால் சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லிவாக்கம் காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பின்னர் இது குறித்து வில்லிவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி ஐசிஎப் ஜே.கே.புதியவன் என்பவர் கொலை வழக்கில் நேற்று கொலை செய்யப்பட்ட பாஸ்கரன் முக்கிய குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது. மேலும், முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாஸ்கரன் கொலை சம்பவத்தில் ஜேகே புதியவனின் மைத்துனர் சுபாஷ் என்பவருக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Intro:Body:*சென்னை வில்லிவாக்கத்தில் முன்விரோதம் காரணமாக கார் டிரைவர் வெட்டி கொலை.*

வில்லிவாக்கம் பாலராமபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் கார் ஓட்டும் தொழில் செய்கிறார். இந்த நிலையில் பாஸ்கரன் நேற்று இரவு பாஸ்கரன் வழக்கம் போல் கார் ஓட்டும் தொழிலை முடித்து விட்டு வில்லிவாக்கம் பலராமன் நகர் 4 வது தெருவில் அமைந்துள்ள சிந்தாமணி நியாயவிலை கடை அருகே தனது வீட்டுக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கு ஏற்கனவே பதிவு இருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பாஸ்கரின் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்து உள்ளனர். இதில் நிலை தடுமாறிய பாஸ்கரன் கிழே விழுந்த போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரின் முகம் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வில்லிவாக்கம் போலீசார் இறந்த பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில்
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி ஐசிஎப் ஜே.கே.புதியவன் என்பவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும், முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த பாஸ்கரன் கொலை சம்பவத்தில் ஜேகே புதியவனின் மைத்துனர் சுபாஷ் என்பவருக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.