சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்ற பெயரை, தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சகம் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பிய கடிதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் போன்ற சார்ட்டர்டு நீதிமன்றங்களான பம்பாய் உயர் நீதிமன்றம், கல்கத்தா உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்படவில்லை.
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்துடன் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் உள்ளதால் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்வது முறையாக இருக்காது என நீதிபதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூன்று நீதிபதிகள் பணிநீக்கம் - உயர் நீதிமன்றம் அதிரடி!