சென்னை பரங்கிமலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் பார்சல் வருவதாக தி. நகர் மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளர் விஜயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு நேற்றிரவு பேருந்து மூலம் பார்சலில் வந்த கஞ்சாவை வாங்கவந்த பம்மலைச் சேர்ந்த மிதுன் (30) என்ற நபரைப் பிடித்து பரங்கிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் கொடைக்கானலிலிருந்து செல்வம் என்பவர் பார்சல் ஒன்றை அனுப்பியதாகவும் அதனை வாங்கி ஜனா என்பவரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.
மிதுன் பார்சலை வாங்க பரங்கிமலைக்குச் சென்று வாங்கும்போது முன்னதாக காத்திருந்த காவல் துறையினர் கையும், களவுமாகப் பிடித்தனர்.
அவரிடமிருந்து நான்கு கிலோ கஞ்சாவைப் பறிமுதல்செய்து மிதுன் மீது வழக்குப்பதிந்து பரங்கிமலை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.