விழுப்புரம் மாவட்டத்தில் ஒற்றுமை, அமைதியை வலியுறுத்தி அரவிந்தர் மற்றும் அன்னையால் ஆரம்பிக்கப்பட்டது ஆரோவில் அறக்கட்டளை. அதன் நிர்வாகத்தை கவனிக்க நிர்வாக குழு, குடியிருப்புவாசிகள் சபை, குடியிருப்புவாசிகள் சபையின் செயற்குழு, சர்வதேச ஆலோசனைக் கவுன்சில் ஆகிய நான்கு அமைப்புகள் உள்ளன.
இதில் ஆரோவில் நகர் மேம்பாட்டு கவுன்சில், குடியிருப்புவாசிகள் சபை ஆகியவற்றின் உறுப்பினர்களை நீக்கிவிட்டு, புதிய உறுப்பினர்களை நியமித்து மாற்றியமைத்து அறக்கட்டளை உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அப்துல்குத்தூஸ், நான்கு அமைப்புகளையும் மாற்றியமைத்து அறக்கட்டளை செயலாளர் பிறப்பித்த உத்தரவு, சட்டத்துக்கு விரோதமாக உள்ளதாக கூறி, அந்த உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
2005ஆம் ஆண்டுக்கு பின் ஆரோவில் குடியிருப்புவாசிகள் சபையில் பதிவுகள் புதுப்பிக்கப்படாததால், விரிவான விளம்பரங்களை வெளியிட்டு, பதிவுகளை புதுப்பிக்கும்படி ஆரோவில் அறக்கட்டளை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற தாரக மந்திரத்தை பின்பற்றி, அரவிந்தர் மற்றும் அன்னையின் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினரை கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: சென்னை நகைக்கடன் நிறுவனத்தில் ரூ.20 கோடி நகைகள் கொள்ளை