கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை இன்று முதல் அமல்படுத்தி வரும் நிலையில், மக்களின் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டு இருக்கிறது. இதனால், ரயில்களில் பயணிகள் செல்வது மிகவும் குறைவாக உள்ளது. பயணிகள் வரவு குறைவாக இருப்பதனால் 6 சிறப்பு ரயில்கள் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இந்த அறிவிப்பு இந்த மாத இறுதியில் இருந்து ஜூன் 15ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்கள் ரத்து
அதன்படி நாகர்கோவில் - கோவை - நாகர்கோவில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கோவை - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் - திருச்சி - சென்னை எழும்பூர், கோவை - மங்களூர் சென்ட்ரல் - கோவை, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் - மதுரை - சென்னை எழும்பூர் ஆகிய மார்க்கங்களில் செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.