ETV Bharat / state

பொதுமக்களின் பெயரில் கடன்... கால் சென்டர் நவீன மோசடி! - ஃபீனிக்ஸ் என்ற பெயரில் கால் சென்டர்

சென்னை: ஃபீனிக்ஸ் எனும் கால் சென்டர் நிறுவனம் பொதுமக்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று அவர்களின் பெயர்களில் வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கால் சென்டர் செய்த மோசடி
author img

By

Published : Oct 16, 2019, 9:52 AM IST

சென்ற ஆறு மாத காலமாக சென்னை சித்தாலப்பாக்கத்தில் ஃபீனிக்ஸ் என்ற பெயரில் கால் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த கால் சென்டரில் பொதுமக்களின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு கடன் கொடுப்பதாகவும் பல சேவைகள் வழங்குவதாகவும் ஆசை வார்த்தைக் கூறி பேசியுள்ளனர்.

அதன்பின் அவர்களிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு‌ எண் உள்ளிட்ட விவரங்களைப் பெற்று அவர்களுடைய ஆவணங்களை வைத்து அவர்களுக்கே தெரியாமல் மோசடிக்காகப் பயன்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலருக்கும் அவர்களின் விவரங்களை வைத்து வங்கிகளில் கடன் வாங்கியிருக்கும் தகவல் கிடைத்தவுடன் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து தொடர்புடையவர்கள் அந்த கால் சென்டர் நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து ரகசிய விசாரணை நடத்தி வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், சித்தாலப்பாக்கத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த போலி கால்சென்டரில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

பின்னர் அங்கு வேலை பார்த்து வந்த ஐந்து பெண்கள் உள்ளிட்ட சுமார் 12 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதுகுறித்து கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் அந்த நிறுவனத்தின் விபரம் அறியாமல்தான் அங்கு வேலைக்குச் சேர்ந்தார்கள் என்று அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்க:

போலீஸ் என்று கூறி முதியவரிடம் நூதன முறையில் கொள்ளையடித்த நபர் கைது!

Intro:Body:சென்னை சித்தாலப்பாக்கம் கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக செயல்பட்டு வந்த போலி கால் சென்டர் நிறுவன ஊழியர்கள் மற்றும் அதை நடத்தி வந்த நபர்களும் என சுமார் 15 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்

ஃபீனிக்ஸ் கால் சென்டர் என்ற பெயரில் சித்தாலபாக்கத்தில் கடந்த ஆறு மாத காலமாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த கால்செண்டரில் பொதுமக்களின் ஏராளமான தொலைபேசி எண்களை பெற்று அந்த எண்களை வைத்து ஒவ்வொருவராக அழைத்து லோன் வேண்டுமா என்பது உட்பட பல சேவைகளை வழங்குவதாக கூறி ஆசைவார்த்தை காட்டு வதும்

அதன் பின்னர் அவர்களுடைய ஆதார் கார்டு ஓட்டர் ஐடி வங்கி‌எண் உள்ளிட்ட விவரங்களை பெற்று அவர்களுடைய ஆவணங்களை வைத்து அவர்களுக்கே தெரியாமல் மோசடியில் பயன்படுத்தும் வேலையை தான் இந்த போலி கால் சென்டர் நிறுவனம் செய்து வந்துள்ளது

இதனால் பலர் தங்களின் விவரங்களை வைத்து லோன் வாங்கப் பட்டு இருப்பது குறித்த தகவல் கிடைத்தவுடன் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன்ர. மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்

இது குறித்து ரகசிய விசாரணை நடத்தி வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார். சித்தாலா பாக்கத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த போலி கால்சென்டரில் அதிரடியாக சோதனை நடத்தி அந்த நிறுவனத்தை நடத்தி வந்த மற்றும் வேலை பார்த்து வந்த 5 பெண்கள் உட்பட சுமார் 12 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இதுகுறித்து கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள்

அது என்ன நிறுவனம் என்று தெரியாமல் தங்களுடைய மகன் மகள் மருமகள் வேலை பார்த்து வந்ததாகவும் 'டெலி காலர்' வேலை என்றும் அதற்கு சம்பளமாக மாதா மாதம் 10 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியதால் தான் தங்கள் வீட்டு பிள்ளைகளை வேலைக்கு அனுப்பியதாக கைது செய்யப்பட்டோர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.