ETV Bharat / state

அனல் மின் நிலையங்கள் சுற்றுச்சூழலுக்கு சவாலாக இருந்தன - கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை அறிக்கை - கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை

நிலக்கரி அனல் மின் நிலையங்கள் சுற்றுச்சூழலுக்கு சவாலாக இருந்தன என்று கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையங்கள்
அனல் மின் நிலையங்கள்
author img

By

Published : Jun 27, 2021, 8:25 AM IST

சென்னை: அனல் மின் நிலையங்கள் தொடர்ச்சியாக நிலத்தின் மீது கொட்டி வரும் சாம்பலால் சென்னையில் நிலத்தடி நீர், பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆறு பெருமளவில் மாசுபட்டிருப்பதாக இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐந்து அனல் மின்நிலையங்கள்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் ஐந்து இடங்களில் அனல் மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இவற்றில் இரண்டு மேட்டூரிலும், ஒன்று தூத்துக்குடியிலும், இரண்டு வட சென்னையிலும் இயங்கி வருகின்றன.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையின்படி, வட சென்னை அனல் மின் நிலையங்கள் 3.96 மெட்ரிக் டன் அளவுக்கு பக்கிங்காம் கால்வாயிலும், 7.93 மெட்ரிக் டன் அளவுக்கு கொசஸ்தலை ஆற்றிலும் உலை சாம்பலைக் கொட்டியுள்ளன.

இவற்றை அகற்றும்படி மாசுக் கட்டுப்பட்டு வாரியம் கேட்டுக்கொண்டது.

மேலும், 20.25 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள மாசு படிந்த குழாயை மாற்றும்படியும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை கேட்டுக்கொண்டது.

மாசுக் கட்டுபாட்டுவாரியம் விதித்த அபராதம்

தொடர்ந்து, 2004ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை அனல் மின்நிலையங்களை முறையாக பராமரிக்காததால், மாசுக் கட்டுப்பட்டு வாரியம் ரூ.16.46 கோடி சுற்றுச்சூழல் இழப்பீடாக செலுத்துமாறு மின் வாரியத்திற்கு உத்தரவிட்டது.

தணிக்கைத்துறையின் ஆய்வறிக்கையின் படி, "இந்திய அரசால் வகுக்கப்பட்ட வழிமுறைகளைக் கடைபிடித்து, அனல் மின் நிலையங்களை, தமிழ்நாடு மின் வாரியம் பராமரிக்கவில்லை. இதனால் அனல் மின் நிலையங்களை படிப்படியாக குறைக்க உத்தரவிட்டது.

இருந்த போதிலும், 62.15 மெட்ரிக் டன் அளவுள்ள சாம்பலை முறையாக அகற்றாமல் மார்ச் 2019ஆம் ஆண்டு வரை வரையறுக்கப்படாத இடத்தில் கொட்டியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் பெரிதளவில் மாசு அடைந்துள்ளது.

இது மட்டுமல்லாமல் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றையும் பாதித்துள்ளது" என சுட்டிக் காட்டியுள்ளது.

அனல் மின்நிலையங்களை மூடவேண்டும்

இதுகுறித்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த ஜி. சுந்தரராஜன் கூறுகையில், "இந்த சுற்றுச்சூழல் பிரச்னையை பல முறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் தமிழ்நாடு மின் வாரியம், அனல் மின் நிலையங்களை முழுவதுமாக மூடவில்லை.

அனல் மின் நிலையத்தின் சாம்பலால் காற்று, நிலத்தடி நீர் மற்றும் அருகிலுள்ள நீர்வள ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து இதனை மூட வேண்டும்.

நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து பல்வேறு மாசுப்படுத்திகள் உமிழப்படுகின்றன.

இவைகளும் மனிதர்கள் மற்றும் பல உயிரினங்களுக்கு கேடுதல் விளைவிக்கும் விதமாக இருக்கின்றன" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'பாஜகவின் சூழ்ச்சிக்கு தமிழ்நாடு பலியாகக் கூடாது'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.