ETV Bharat / state

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நிறைவு - அமைச்சரவைக் கூட்டம் நிறைவு

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் கே. பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

cabinet-meeting-chennai
author img

By

Published : Nov 19, 2019, 2:37 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுவரும் நிலையில் இன்று அமைச்சரவைக் கூடியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் பார்க்கப்படுகிறது. தற்போதைய சட்டவிதிகளின்படி மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கான பிரதிநிதிகளை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இதை மாற்றி வார்டு உறுப்பினர்கள் மூலம் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மறைமுகமாகத் தேர்ந்தெடுக்க அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவசரச்சட்டம் கொண்டுவர இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாமக, பாஜக, தேமுதிக, தமாகா போன்ற கூட்டணிக் கட்சிகள், அதிகமான மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளைக் கேட்டுவருவதால் இப்பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைமுகத் தேர்தல் நடைபெற்றால் எந்தக் கட்சிக்கு அதிகமான கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அந்தக் கட்சியைச் சேர்ந்தவரே மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவராக முடியும்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான 30 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதேபோல், கடந்த ஜனவரி 23, 24ஆம் தேதிகளில் நடைபெற்ற, இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மூன்று லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனங்களுக்கு, தொழில் தொடங்க படிப்படியாக அரசு அனுமதி அளித்துவருகிறது. குறிப்பாக, கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க ஏழு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதால் முக்கியத் திட்டங்களை விரைந்து முடிக்கவும் தமிழ்நாடு அரசு சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரில், ’நீட்’ நுழைவுத்தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி சட்ட மசோதா நிறைவேற்றி, மீண்டும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாகவும் பருவமழைக் காலம் என்பதால் பெருமழை, வெள்ளம், புயல் பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது பற்றியும், முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - தொடரும் குழப்பங்கள்

Intro:Body:*உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம் இன்று நடைப்பெற்றது*

தமிழக அமைச்சரவைக்கூட்டம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்..

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. உள்ளாட்சித் தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் பார்க்கப்படுகிறது.

தற்போதைய சட்ட விதிகளின் படி மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதை மாற்றி வார்டு உறுப்பினர்கள் மூலம் மேயர், நக ராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மறைமுகமாகத் தேர்ந்தெடுக்க அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அவசரச்சட்டம் கொண்டுவர இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. பாமக, பாஜக, தேமுதிக, தமாகா போன்ற கூட்டணி கட்சிகள் அதிகமான மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளை கேட்டு வருவதால் இப்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மறைமுக தேர்தல் நடை ல்பெற்றால் எந்தக் கட்சிக்கு அதிகமான கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அந்தக் கட்சியைச் சார்ந்தவரே மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவராக முடியும்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது சுமார் 8 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கான 30 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதேப்போல் கடந்த ஜனவரி 23, 24 தேதிகளில் நடைபெற்ற 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சத்து 431 கோடி முதலீடுகளுக்கான 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க படிப்படியாக தமிழக அரசு அனுமதி அளித்து வருகிறது. குறிப்பாக கடந்த 7ம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க 7 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது அதேப்போல் பல்வேறு தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் முக்கியத் திட்டங்களை விரைந்து முடிக்கவும் தமிழக அரசு சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடரை கூட்டி நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி சட்ட மசோதா நிறைவேற்றி மீண்டும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாகவும், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா என்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், வடகிழக்கு பருவமழைக் காலம் என்பதால் பெருமழை, வெள்ளம், புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டங்களும் நடைபெற்றுள்ளன. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றன.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.