ETV Bharat / state

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - களநிலவரங்கள் உடனுக்குடன்!

election
author img

By

Published : Oct 21, 2019, 7:22 AM IST

Updated : Oct 21, 2019, 8:04 PM IST

19:58 October 21

  • விக்கிரவாண்டியில் 84.36 விழுக்காடு,
  • நாங்குநேரியில் 66.10 விழுக்காடு

வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் 69.44 வாக்குகள் பதிவாகியுள்ளன.

18:20 October 21

தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தது. 

17:21 October 21

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 5 மணி நிலவரப்படி 76.41 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. 

17:14 October 21

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் 5 மணி நிலவரப்படி 62.32 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. 

15:53 October 21

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56.16 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

15:20 October 21

நாங்குநேரியில் 3 மணி நிலவரப்படி 52.18 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

15:19 October 21

விக்கிரவாண்டியில் 3 மணி நிலவரப்படி 65.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன

14:48 October 21

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச். வசந்தகுமார் நாங்குநேரி தொகுதிக்குள் தேர்தல் விதிமுறைகளை மீறி செல்ல முயன்றதால் அவரை தடுத்து நிறுத்தி நாங்குநேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
13:30 October 21

நாங்குநேரி அருகே உள்ள பட்டபிள்ளை புதூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்துடன் வந்தவரை, நாங்குநேரி தாலுகா அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

13:25 October 21

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 42.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன

13:17 October 21

நாங்குநேரியில் 1 மணி நிலவரப்படி 41.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 1,06,323 பேர் வாக்களித்துள்ளனர். 

13:13 October 21

விக்கிரவாண்டியில் 1 மணி நிலவரப்படி 54.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

12:58 October 21

திமுக வேட்பாளர் புகழேந்தி

விக்கிரவாண்டியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தி அப்பகுதிகளில் உள்ள வாக்கு மையங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். 

11:51 October 21

சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர்

காங்கிரஸ் வேட்பாளர் வாக்குப்பதிவுக்கு பரிசு கூப்பன் வழங்கியதைக் கண்டித்து அதிமுகவினர், என்.ஆர்.காங்கிரஸ், சுசி கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர்கள் மறியலை கைவிட்டனர். 

11:40 October 21

நாங்குநேரி தொகுதி: காலை 11 மணி நிலவர வாக்குப்பதிவு!

நாங்குநேரி தொகுதியில் 11 மணி நிலவரப்படி 23.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது 

11:37 October 21

புதுச்சேரி தொகுதி: காலை 11 மணி நிலவர வாக்குப்பதிவு!

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 11 மணி நிலவரப்படி 28.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது

11:20 October 21

விக்கிரவாண்டி தொகுதி: காலை 11 மணி நிலவர வாக்குப்பதிவு!

விக்கிரவாண்டி தொகுதியில் 11 மணி நிலவரப்படி 32.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

10:50 October 21

ரெட்டியார்பட்டி நாராயணன் வாக்களிக்க குடும்பத்தோடு வந்தார்

நாங்குநேரியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், குடும்பத்தோடு வந்து வாக்கினைப்பதிவு செய்தார். 

10:13 October 21

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை கருவடிக்குப்பத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் தலைமையில் மறியல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், காங்கிரஸ் சார்பில் 5,000 ரூபாய்க்கான டோக்கன் வழங்கப்படுவதாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

09:53 October 21

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு என்.ஆர் காங்கிரஸ் சார்பில் விநியோகிப்பதற்காக வைத்திருந்த ரூ.27,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சாரம் பாலாஜி நகரில் வாக்குச்சீட்டு, வாக்காளர் பட்டியல் மற்றும் ரூ.27,500 பணத்துடன் பவுன்பேட்டை வேலு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

09:43 October 21

விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் புதிய வாக்குப்பதிவு இயந்திரம் வரவழைக்கப்பட்டு 40 நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. 

09:39 October 21

புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதியில் 9 மணி நிலவரப்படி 9.06 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

09:39 October 21

நாங்குநேரியில் 9 மணி நிலவரப்படி 6.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தற்போது வரை 16,720 பேர் வாக்களித்துள்ளனர். 

09:36 October 21

விக்கிரவாண்டியில் 9 மணி நிலவரப்படி 12.84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

09:29 October 21

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மொத்தம் 35,009 வாக்காளர்கள் உள்ளனர். அங்குள்ள 33 வாக்குச்சாவடிகளில் 7 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. 200 அரசுப் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 600க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் பிரவீனா தனது வாக்கினைப் பதிவு செய்தார். 

09:29 October 21

ரூபி மனோகரன் நம்பிக்கை

காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்

நாங்குநேரி இடைத்தேர்தலில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிக்கவும், தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுவதாகவும், இந்த தொகுதியில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.

09:11 October 21

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்கு இயந்திர கோளாறால் ஒருமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டியில் மழை சற்று குறைவானதால் வாக்காளர்கள் தற்போது வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

08:20 October 21

விக்கிரவாண்டி தொகுதியில், பூத் 49 தொரவி ஊராட்சியில் வாக்குப்பதிவு இயந்திரம் சரிசெய்யப்பட்ட பின் வாக்குப்பதிவு சற்று தாமதமாகத் தொடங்கியது. 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் மொத்தம் 2,57,418 வாக்காளர்கள் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் 170 வாக்கு மையங்களில் 299 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 1,480 பேர் தேர்தல் பணியில் உள்ளனர். மொத்தம் 2,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளுக்குள் கூடுதலாக காவல் துறையினர் உள்ளனர்.
 
08:05 October 21

வாக்கு செலுத்திவிட்டு வெளியில் வரும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார்

புதுச்சேரி மாநிலம் காமராஜ் நதரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் தனது வாக்கினைப் பதிவு செய்தார். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,331 அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக  2,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் 1,11,607 ஆண் வாக்காளர்கள் மற்றும் 1,11,546 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் என மொத்தம் 2,23,000 வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர்.

07:54 October 21

புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதிக்கான வாக்குப்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் காமராஜ் நகரில் வாக்குப்பதிவு செய்ய வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில், பூத் 49 தொரவி ஊராட்சியில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு இன்னும் தொடங்கவில்லை.

07:41 October 21

முத்தமிழ்செல்வன் வாக்கு செய்தார்
முத்தமிழ்செல்வன் வாக்குப்பதிவு செய்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்யும் கனமழையால், விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது. 

விக்கிரவாண்டியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் தனது வாக்கினைப் பதிவு செய்தார். 

07:10 October 21

விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

Intro:Body:

by election vikaravandi

Conclusion:
Last Updated : Oct 21, 2019, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.