தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்துவரும் நிலையில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு வரும் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கரோனா தொற்று குறைந்துள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இன்று (ஜூன் 21) காலை 6 மணிமுதல் 50 விழுக்காடு பயணிகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி அளித்துள்ளது. அண்ணா நகர் மண்டலப் போக்குவரத்து சார்பாக 207 பேருந்துகளும், வடபழனி மண்டலப் போக்குவரத்து சார்பாக 199 பேருந்துகள் என மொத்தம் 1400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் ஓட்டுநர், நடத்துநர், பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எச்சில் தொட்டு பயணச்சீட்டு கொடுக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து பயணிகளின் வரவைப் பொறுத்து பேருந்துகளை அதிகரிக்க முடிவுசெய்துள்ளதாகப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இன்று கூடுகிறது 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்