ETV Bharat / state

முதலமைச்சர் செல்லும் பாதையில், மேல்கூரை கீழே விழும் ஆபத்து!

சென்னை: மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரி பேருந்து நிலையத்தின் தகர மேல்கூரை கீழே விழும் நிலையில் உள்ளதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேல்கூரை கீழே விழும் ஆபத்து!
மேல்கூரை கீழே விழும் ஆபத்து!
author img

By

Published : Apr 19, 2020, 3:22 PM IST

சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரி பேருந்து நிலையம், சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயணியர் நிழற்குடை தகர மேற்கூரை கீழே விழும் நிலையில் உள்ளது.

மெரினா கடற்கரை ஓரத்தில் காற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பேருந்து நிலையத்தின் மேற்கூரை எப்போது வேண்டுமானலும் கீழே விழும் அபாயம் இருப்பதால், அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்தில் உள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இங்கு ஆட்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது.

ஆபத்து நிலையில் உள்ள பேருந்து நிறுத்தம்
ஆபத்து நிலையில் உள்ள பேருந்து நிறுத்தம்

அதுமட்டுமல்லாமல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்திலிருந்து மெரினா கடற்கரை சாலை வழியே தினம்தோறும் தலைமைச் செயலகம் சென்றுவருகிறார். எனவே, ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ள இந்த பேருந்து நிலைய மேற்கூரையை உடனடியாக மாற்றி தரும்படியும், பெரு விபத்து நடக்காத வண்ணம் தவிர்க்கும் படியும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முதலமைச்சர் செல்லும் பாதையில், மேல்கூரை கீழே விழும் ஆபத்து!

இதையும் பார்க்க: நிவாரண உதவிக்கு இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.