தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
வரும் 21ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 5ஆவது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும், எந்தெந்த மாவட்டங்களுக்கு கூடுதலாக தளர்வுகள் வழங்கலாம்? என்பது தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக அதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பேருந்து சேவையை 50 விழுக்காட்டுப் பயணிகளுடன் அனுமதிக்கலாம் என முதலமைச்சர் உடனான ஆலோசனையில் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இதையும் படிங்க: கல்வித் தொலைக்காட்சியில் வகுப்புகளைத் தொடங்கிவைத்த முதலமைச்சர்