ETV Bharat / state

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்! - fight

சென்னை: திருவொற்றியூர் அருகே பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

auto driver arrested
author img

By

Published : Aug 22, 2019, 11:41 PM IST

சென்னை பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் வரை செல்லும் தடம் எண் 101 பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டி வந்தார். திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகே வந்தபோது, அவ்வழியாக சென்ற ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பேருந்தை முந்திச் சென்றார். இதனால், பேருந்து ஓட்டுநருக்கும் ஆட்டோ ஓட்டுநரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆட்டோ டிரைவரை கைது செய்யும் போலீசார்

வாக்குவாதம் கைகளப்பாக மாறிய நிலையில், எண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன் குடிபோதையில் இருந்ததால், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநரால் தாக்கப்பட்ட பாஸ்கரன் பேருந்தை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நிறுத்தி வைத்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் காவல்துறையினர், ஆட்டோ ஓட்டுநர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைதுBody:சென்னை பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் வரை செல்லும் தடம் எண் 101 பேருந்து ஓட்டுநர் பாஸ்கரன் பேருந்தை ஓட்டி திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகே ஓட்டி வரும் பொழுது அவ்வழியாக சென்ற ஷேர் ஆட்டோ ஓட்டுனர் பேருந்தை முந்திச் சென்ற பொழுது பேருந்து ஓட்டுனரும் ஆட்டோ ஓட்டுநரும் வாக்குவாதம் ஏற்பட்டது வாக்குவாதத்தில் எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முருகன் குடிபோதையில் இருந்ததால் பேருந்து ஓட்டுனரை நடத்துனரை தாக்கியுள்ளார் இதனால் மாநகர பேருந்து ஓட்டுனர் பாஸ்கரன் பேருந்தை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நிறுத்தி வைத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருவொற்றியூர் போலீசார் ஆட்டோ ஓட்டுநர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.