ETV Bharat / state

பேருந்து எரிக்கப்பட்ட விவகாரம்: குற்றவாளிகளுக்கு காவல் துறை வலைவீச்சு

ஆவடி அருகே பாமக நிர்வாகி விபத்தில் உயிரிழந்ததையடுத்து, பேருந்தை எரித்து நாச செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், இதில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்டோரை தேடிவருகின்றனர்.

Bus burning case
Bus burning case
author img

By

Published : Dec 17, 2020, 3:12 PM IST

சென்னை: பாமக நிர்வாகி விபத்தில் உயிரிழந்த விரக்தியில், பேருந்தை அடித்து நொறுக்கி, தீ வைத்து நாச செயலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

விபத்தில் உயிரிந்த பாமக நிர்வாகி:

சென்னை, ஆவடியை அடுத்த பட்டாபிராம், அமுதூர்மேடு, பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). இவர் பாமக மாநில இளைஞர் அணி துணைத்தலைவராக இருந்துவந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பட்டாபிராம் -பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, அமுதூர்மேடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்து மோதி கார்த்திகேயன் உயிரிழந்தார்.

ஓட்டுநர் கைது:

இதனையடுத்து, பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் உறவினர்கள் பேருந்தை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்தனர். இதில், பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. மேற்கண்ட விபத்து குறித்து பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பேருந்து ஓட்டுநர் ரவி (45) என்பவரை கைது செய்தனர்.

எரிக்கப்பட்ட பேருந்து
எரிக்கப்பட்ட பேருந்து

இந்நிலையில், பேருந்து எரித்தது தொடர்பாக அதன் உரிமையாளர் சுந்தரராஜன் (61) என்பவர் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பேருந்தை எரித்த 10க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாக நபர்களை தேடிவருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கடத்தல் டிராக்டரை மடக்கிப் பிடித்த சார் ஆட்சியர்: அதிமுக நிர்வாகி மீது வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.