ETV Bharat / state

'பட்ஜெட்டில் மருத்துவத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது; ஆனால் நிதி இல்லை!' - திட்டம் இருக்கு மருத்துவத் துறைக்கான நிதி இல்லை

சென்னை: மருத்துவத் துறைக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அதற்கான நிதியில்லை என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மருத்துவர் சாந்தி தெரிவித்தார்.

மருத்துவர் சாந்தி கருத்து
மருத்துவர் சாந்தி கருத்து
author img

By

Published : Feb 2, 2020, 9:45 AM IST

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாந்தி நேற்று தாக்கல்செய்யப்பட்ட 2020-21ஆம் நிதியாண்டு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்கள் நல்வாழ்வுத் துறை 69 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். கடந்தாண்டு 62 ஆயிரத்து 759 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தனர்.

புதிதாக 75 மருத்துவக் கல்லூரி உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. தற்பொழுது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி மத்திய அரசு அறிவித்துள்ள எந்தத் திட்டத்திற்கும் போதுமானதாக இருக்காது.

குறிப்பாக 2025ஆம் ஆண்டிற்குள் காசநோய் முற்றிலும் ஒழிப்போம் எனவும், இந்தியாவிற்கும் காசநோய்க்கும் பிழையான போராட்டத்தில் இந்தியாவே வெல்லும் என அலங்கார வார்த்தையை கூறியுள்ளார். ஆனால் அதற்கான தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. இது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.

உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி 2025 ஆம் ஆண்டில் 2.5 விழுக்காடாக அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார். உள்நாட்டு உற்பத்தி 2.5 விழுக்காடு அதிகரிக்க ஐந்து ஆண்டுகள் தேவை எனக் கூறினால், மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தும் காகிதத்தில் மட்டுமே இருக்கும்.

அதேபோல் பிரதம மந்திரியின் கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதி உதவித் திட்டம் ரூ.6000 வழங்குவதில் இந்தியா முழுவதும் 40 சதவிகிதம் கர்ப்பிணிகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகத் தெரிகின்றது. எனவே இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்தால் நடைமுறைப்படுத்த சாத்தியக்கூறுகள் இல்லை எனத் தெரிகிறது.

மருத்துவர் சாந்தி கருத்து

மேலும் தனி நபர்களுக்கு சுமையை ஏற்றும்வகையில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக மருத்துவ வரியை விதிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கான நிதியை மக்களிடம் வாங்கி செலவு செய்வோம் எனக் கூறுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இதேபோல் அனைத்து துறைகளிலும் பொது தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

இது பொதுமக்களுக்கு சுமையைத் உருவாக்கும். மாவட்ட மருத்துவமனைகள் தனியார் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரிகளாக கார்ப்பரேட் நிறுவனங்களின் வடிவமைப்பில் உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளார். இது மிகவும் வருத்தப்படக்கூடிய வேதனைப்படக்கூடிய சம்பவமாக உள்ளது.

தனியார் துறையிடம் நீங்கள் உமி எடுத்துக் கொண்டு வாங்க, நான் அரிசி எடுத்து வருகிறேன், ஊதி சாப்பிடலாம் என்பதுபோல் அமைந்துள்ளது. அனைத்தையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு பொதுமக்களுக்கு இலவசமாகச் சேவைகள் எதுவும் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும். அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான இலவச சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நமது நோக்கம் நிறைவேறாமல் செல்லும் என்பதுதான் முக்கியப் பிரச்னையாக உள்ளது.

மக்கள் மருந்தகம் மாவட்டம்தோறும் ஏற்படுத்துவது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. ஆனாலும் அதனை அடக்க விலையில்தான் தருவார்கள் எனக் கூறியுள்ளனர். அவ்வாறு இல்லாமல் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் மூலம் அரசே மருந்து மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்தால் மிக மிக தரமான மருந்துகள், மருத்துவ உபகரணங்களைக் குறைந்த விலையில் தயாரித்துசெய்து மக்களுக்கு அளிக்க முடியும். அவ்வாறு அளிப்பதுதான் நன்றாக இருக்கும்.

அரசு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படும் அறிவிப்புகள்தான் தொடர்ந்துவருகிறது. இந்த மத்திய நிதிநிலை அறிக்கையிலும் புதிதாக எந்த மருந்து உற்பத்தி நிறுவனமும் தொடங்குவதற்கான அறிவிப்பு வரவில்லை.

செங்கல்பட்டு அருகே தடுப்பூசி தயார் செய்யும் நிறுவனத்தை மூடப் போகிறோம் என அறிவித்தனர். தொடர்ந்து அனைத்தையும் தனியார்வசம் ஒப்படைத்தால் பொதுமக்கள் தனியார் நிறுவனம் நிர்ணயிக்கும் விலையில்தான் வாங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். இந்த நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மருத்துவத் துறையைப் பொறுத்தளவில் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து

Intro:மக்கள் நல்வாழ்வு துறை ஒதுக்கீடு குறித்து
மருத்துவர் சாந்தி பேட்டி

Body:சென்னை,

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாந்தி கூறியதாவது, மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்கள் நல்வாழ்வுத்துறை 69 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். கடந்தாண்டு 62 ஆயிரத்து 759 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தனர்.

புதிதாக 75 மருத்துவக் கல்லூரி உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. தற்பொழுது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி மத்திய அரசு அறிவித்துள்ள எந்த திட்டத்திற்கும் போதுமானதாக இருக்காது.

குறிப்பாக 2025ம் ஆண்டிற்குள் காசநோய் முற்றிலும் ஒழிப்போம் எனவும், இந்தியாவிற்கும் காச நோய்க்கும் பிழையான போராட்டத்தில் இந்தியாவே வெல்லும் என அலங்கார வார்த்தையை கூறியுள்ளார். ஆனால் அதற்கான தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. இது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.

உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி 2025 ஆம் ஆண்டில் 2.5 சதவீதமாக அதிகரிக்கும் என கூறியுள்ளார். உள்நாட்டு உற்பத்தி 2.5 சதவீதம் அதிகரிக்க 5 ஆண்டுகள் தேவை எனக் கூறினால், மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தும் காகிதத்தில் மட்டுமே இருக்கும்.

அதேபோல் பிரதம மந்திரியின் கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதி உதவித் திட்டம் rs.6000 வழங்குவதில் இந்தியா முழுவதும் 40 சதவீதம் கர்ப்பிணிகளுக்கு மட்டுமே வழங்கப் படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாக தெரிகின்றது. எனவே இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்தால் நடைமுறை ப்படுத்த சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிகிறது.

மேலும் தனி நபர்களுக்கு சுமையை ஏற்றும் வகையில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக மருத்து வரியை விதிப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கான நிதியை மக்களிடம் வாங்கி செலவு செய்வோம் எனக் கூறுவது மிகவும் வேதனை அளிக்கிறது.

இதேபோல் அனைத்து துறைகளிலும் பொது தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார். இது பொதுமக்களுக்கு சுமையைத் உருவாக்கும். மாவட்ட மருத்துவமனைகள் தனியார் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரிகளாக கார்ப்பரேட் நிறுவனங்களின் வடிவமைப்பில் உருவாக்கப்படும் என கூறியுள்ளார். இது மிகவும் வருத்தப்படக்கூடிய வேதனைப்படக்கூடிய சம்பவமாக உள்ளது.

தனியார் துறையிடம் நீங்கள் உமி எடுத்துக் கொண்டு வாங்க, நான் அரிசி எடுத்து வருகிறேன், ஊதி சாப்பிடலாம் என்பதுபோல் அமைந்துள்ளது.
அனைத்தையும் தனியாரிடம் கொடுத்து விட்டு பொதுமக்களுக்கு இலவசமாக சேவைகள் எதுவும் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான இலவச சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நமது நோக்கம் நிறைவேறாமல் செல்லும் என்பதுதான் பதில் முக்கிய பிரச்சனையாக உள்ளது.

மக்கள் மருந்தகம் மாவட்டம்தோறும் ஏற்படுத்துவது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. ஆனாலும் அதனை அடக்க விலையில் தான் தருவார்கள் என கூறியுள்ளனர். அவ்வாறு இல்லாமல் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் அரசே மருந்து மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்தால் மிக மிக தரமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை குறைந்த விலையில் தயாரித்து செய்து மக்களுக்கு அளிக்க முடியும். அவ்வாறு அளிப்பதுதான் நன்றாக இருக்கும்.

அரசு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படும் அறிவிப்புகள் தான் தொடர்ந்து வருகிறது. இந்த நிதிநிலை அறிக்கையிலும் புதிதாக எந்த மருந்து உற்பத்தி நிறுவனமும் தொடங்குவதற்கான அறிவிப்பு வரவில்லை. செங்கல்பட்டு அருகே தடுப்பூசி தயார் செய்யும் நிறுவனத்தை மூடப் போகிறோம் என அறிவித்தனர். தொடர்ந்து அனைத்தையும் தனியார் வசம் ஒப்படைத்தால் பொதுமக்கள் தனியார் நிறுவனம் நிர்ணயிக்கும் விலையில் தான் வாங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். இந்த நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்தமாக பார்த்தால் மருத்துவத்துறையை பொறுத்த அளவில் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.