ETV Bharat / state

செயலிழந்து கிடக்கும் காவல்நிலைய லேண்ட்லைன்கள்; புகாரளிக்க முடியாத பொதுமக்கள் தவிப்பு!

சென்னை: பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லேண்ட்லைன் இணைப்புகள் முற்றிலுமாக செயல்படாததோடு, முக்கிய காவல் நிலையங்களிலும் தொலைத்தொடர்புகள் செயல்படாத நிலையில் இருப்பது மக்களை பெரும் இன்னலில் ஆழ்த்தியுள்ளது.

பி.எஸ்.என்.எல்.
author img

By

Published : Aug 2, 2019, 6:38 PM IST

சென்னை மண்ணடி பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தால், தொலைத்தொடர்பு கருவிகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனால் சென்னையில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் முற்றிலுமாக செயல்படாத நிலையில் உள்ளது.

இந்நிலையில், பிஎஸ்என்எல் அலுவலர்கள் சார்பில் நேற்று 20 ஆயிரம் இணைப்புகாள் சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தி.நகர், பூக்கடை, மாதவரம், புளியந்தோப்பு, அண்ணா நகர், பரங்கிமலை ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களின் தொலைத்தொடர்பு இணைப்புகள் முற்றிலுமாக செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் புகாரளிக்க முயற்சி செய்யும் பொதுமக்கள் பெரும் இன்னலைச் சந்தித்து வருகின்றனர்.

இந்தப் பிரச்னை சரியாக இன்னும் சில நாட்கள் ஆகலாம் என காவல்துறையினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை அவசர அழைப்பு எண்ணான 100 எண் மட்டும் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:*சென்னை முழுவதும் காவல் நிலையங்களின் லேண்ட்லைன் இணைப்பு செயல்படவில்லை.*!

சென்னை மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் நேற்று காலை தீ விபத்து நிகழ்ந்தது. இந்த தீ விபத்தில் தொலைத் தொடர்பு இணைப்புகள் கருவிகள் பெரும்பான்மையாக எரிந்து நாசமானது.

இந்த காரணத்தால் சென்னையின் பல இடங்களில் இணைக்கப்பட்ட 30,000 லேண்ட்லைன் இணைப்புகள் தொடர்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விட்டது.

பி எஸ் என் எல் அதிகாரிகள் தரப்பில் நேற்று 20 ஆயிரம் இணைப்புகள் சரி செய்யப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது
சென்னையின் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தி நகர், பூக்கடை, மாதவரம், புளியந்தோப்பு, அண்ணா நகர், பரங்கிமலை ஆகிய காவல் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களின் தொலைத்தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விட்டது.

சென்னை கமிஷனர் அலுவலகத்திலும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இந்த காரணத்தால் காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்க முயற்சி செய்யும் பொதுமக்கள் பெரும் இன்னலை சந்திக்கக்கூடும்.

இந்தப் பிரச்சனை சரியாக இன்னும் சில தினங்கள் ஆகலாம் என காவல்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை அவசர அழைப்பு எண்ணான 100 மட்டும் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.