சென்னை: பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஸ்டீல்ஸ் என்ற நிறுவனம் எஸ்பிஐ கன்சார்டியம் வங்கிகள் மூலம் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து கடன்பெற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டிலிருந்து வங்கிகளிடம் பெறப்பட்ட கடனை இந்நிறுவனம் தவறாகப் பயன்படுத்தி வந்தது வங்கிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் துணை பொது மேலாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரில் சிபிஐ இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளது. பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வடிவாம்பாள் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை 6ஆம் தேதி, இவர்கள் நடத்திய தங்கம் ஸ்டீல்ஸ் என்ற நிறுவனமும், 2009-2013 காலகட்டத்தில் 88 கோடி ரூபாய் அளவு வங்கி மோசடி செய்த விவகாரத்தில் இவர்கள் இருவர் பெயரிலும் சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மொத்தமாக 479 கோடி ரூபாய் வங்கி மோசடி செய்தது குறித்து இரும்பு நிறுவனங்களின் இயக்குநர்கள் மீது சிபிஐ இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு நிலம் எடுத்ததில் நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ரூ.200 கோடி இழப்பு ?- சிபிஐ விசாரிக்க பரிந்துரை