சென்னை வில்லிவாக்கம் செட்டித்தோப்பைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் அவரைப் பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்துவருகிறார். அவருடன் அவரது மகள், மகன் ஆகியோரும் வசித்துவருகின்றனர். 13 வயதேயான அவரது மகன் தனது சகோதரியை சில நாள்களாக, கயிற்றில் கட்டிப்போட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனை முதலில் தனது தாயிடம் தெரிவிக்காமல் இருந்த அச்சிறுமி, ஒரு கட்டத்திற்கு மேல் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துக் கூறியுள்ளார்.
இதையடுத்து அப்பெண் தனது மகன் மீது வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் விசாரணை செய்த காவல் துறையினர், அப்பெண்ணின் மகனை போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது!