ETV Bharat / state

குட்கா விவகாரம்.. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

குட்கா பொருட்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்தது தொடர்பாக அப்போதைய தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பேரவை உரிமைக்குழு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Gutka issue
குட்கா விவகாரம்
author img

By

Published : Jun 9, 2023, 6:23 AM IST

சென்னை: குட்கா பொருட்களைச் சட்டப் பேரவைக்குள் கொண்டு வந்தது தொடர்பாக அப்போதைய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பேரவை உரிமைக் குழு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் 2013ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு எடுத்து வந்து காண்பித்ததற்காக, அப்போதைய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்னை எடுக்கப்பட்டு, பேரவை உரிமைக் குழு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 திமுக எம்எல்ஏக்களும் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2017ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ் நடைமுறையில் அடிப்படைத் தவறுகள் உள்ளதால் அதை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், பேரவை உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை விசாரித்த தனி நீதிபதி, மீண்டும் நோட்டீஸை ரத்து செய்து தீர்ப்பளித்தார். இது தொடர்பாக 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை உரிமைக்குழு மற்றும் பேரவை செயலாளர் தரப்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 17 திமுக எம்எல்ஏக்களும், பாஜகவில் இணைந்த கு.க.செல்வமும் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மேல் முறையீட்டு மனு நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (ஜூன் 8) விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் சிலம்பண்ணன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, இந்த மேல்முறையீடு வழக்கை விசாரிக்க வேண்டுமென வலியுறுத்த விரும்பவில்லை எனத் தெரிவித்தனர். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உரிமைக்குழு நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஆளுநரால் பட்டம் பெற முடியாமல் தவிக்கும் 9 லட்சம் மாணவர்கள்: அமைச்சர் பொன்முடி கூறிய பகீர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.