ETV Bharat / state

2025க்குள் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - சவுமியா அன்புமணி!

சென்னை: கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுவை ஏற்படுத்த வேண்டும் என சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

Breast Cance
author img

By

Published : Nov 1, 2019, 10:53 AM IST

சென்னை விமான நிலையங்கள் ஆணையம், தன்னார்வ அமைப்புகள் இணைந்து, சென்னை விமான நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக பெண்கள் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. விமான நிலைய பன்னாட்டு முனைய வளாகத்தில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம், சுங்கத்துறை துணை ஆணையர் சவுத்ரி உள்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது, சவுமியா அன்புமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தன்னார்வ அமைப்பு சார்பில் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு உலகம் முழுவதும் நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் ஒரு மாதம் விழிப்புணர்வு முகாம் நடந்தது. சென்னை போன்ற நகரங்களில் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு இருந்தாலும் கிராமப்புறங்களில் இல்லை.

இதுகுறித்து நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்கள் அறிந்து கொண்டால் ஊர்களுக்கு செல்லும் போது மற்ற பெண்களிடம் தெரிவிப்பார்கள். மரபணு முலமாக மார்பகப் புற்றுநோய் வந்தால் எதுவும் செய்ய முடியாது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "மனிதர்கள் தங்கள் வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்க முறையையும் மாற்றிக் கொண்டால் அது நல்ல மாற்றங்களைக் கொடுக்கும்.

இயற்கையாக விளையக் கூடிய பொருள்களைச் சாப்பிட வேண்டும். மருந்துகள் மூலம் விளைந்த உணவுகளை குறைத்து பாரம்பரிய உணவு முறைக்குத் திரும்ப வேண்டும். பெண்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவர் இல்லாமல் தானாக சுய பரிசோதனை செய்து கொள்ள கூடிய விழிப்புணர்வு குறித்த தகவல்கள் பெண்களிடம் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும்.

எந்த வயதுப் பெண்களாக இருந்தாலும் சுய பரிசோதனை முலம் மார்பகப் புற்றுநோயைத் தெரிந்து கொள்ளலாம். மேலும், ஆண்டுதோறும் 1 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில், 76 ஆயிரம் பெண்கள் இறுதி வரை தங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிவதில்லை. இதைத் தடுக்க முடியும். 2025க்குள் விழிப்புணர்வு கொண்டு வரப்படவில்லை என்றால் பல உயிர்களை இழக்க நேரிடும்" என அவர் கூறினார்.

இதையும் படிங்க: உலக மார்பகப் புற்றுநோய் தினம் - மாணவ,மாணவிகள் விழிப்புணர்வு!

Intro:கிராமப்புறங்களில் பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் சவுமியா அன்புமணி பேட்டி:-
Body:கிராமப்புறங்களில் பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் சவுமியா அன்புமணி பேட்டி:-

சென்னை விமான நிலைய ஆணையகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து விமான நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

விமான நிலைய பன்னாட்டு முனைய வளாகத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம், சுங்கத்துறை துணை ஆணையர் சவுத்ரி உள்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் சவுமியா அன்புமணி நிருபர்களிடம் கூறுகையில், தன்னார்வ அமைப்பு சார்பில் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு உலகம் முழுவதும் நடந்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் ஒரு மாதம் விழிப்புணர்வு முகாம் நடந்தது. சென்னை போன்ற நகரங்களில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு இருந்தாலும் கிராமப்புறங்களில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நகர்புறங்களில் பெண்கள் அறிந்து கொண்டால் ஊர்களுக்கு செல்லும் போது தெரிவிப்பார்கள். மரபணு முலமாக மார்பக புற்றுநோய் வந்தால் எதுவும் செய்ய முடியாது. வாழ்க்கை முறையையும் உணவு பழக்க முறையையும் மாற்றி கொண்டால் மாற்றத்தை ஏற்படுத்தும். இயற்கையாக விளைய கூடிய பொருட்களை சாப்பிட வேண்டும். மருந்து முலமாக காய்கறிகள், இறைச்சிகள், பால் தான் கிடைக்கிறது. இதை குறைத்து பாரம்பரிய உணவு முறைக்கு திரும்ப வேண்டும். பெண்கள் மாதம் அல்லது 2 மாதத்திற்கு ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவர் இல்லாமல் தானாக சுய பரிசோதனை செய்து கொள்ள கூடிய விழிப்புணர்வு பெண்களிடம் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். எந்த வயது பெண்களாக இருந்தாலும் சுய பரிசோதனை முலம் கட்டுபடுத்திக் கொள்ளலாம். ஆண்டுதோறும் 1 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் மார்பக புற்றுநோய் வருவதாகவும் அதில் 76 ஆயிரம் பெண்கள் இறுதி கட்டம் வரை தங்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பதை கண்டறிவதில்லை. இதனால் பெண்களை இழக்க நேரிடப்படுகிறது. இதை தடுக்க முடியும். 2025க்குள் விழிப்புணர்வு கொண்டு வரப்படவில்லை என்றால் பெண்களை இழக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.