ETV Bharat / state

பிரதமரைக் கண்டித்துதான் பாஜக போராடணும் - பி.ஆர். பாண்டியனின் பலே யோசனை

மேகதாது விவகாரத்தில் பிரதமரைக் கண்டித்துதான் தமிழ்நாடு பாஜக போராட வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பிரதமரை கண்டித்து தான் தமிழ்நாடு பாஜக போராட வேண்டும்

author img

By

Published : Jul 30, 2021, 2:45 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் செயலர் அலுவலகத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "கர்நாடகாவில் புதிதாகப் பொறுப்பேற்ற முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மேகதாதுவில் அணை கட்ட உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் நீர்ப்பாசன துறைக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் பாசன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

நீர்ப்பாசன பிரச்சினைகளில் ஏற்படுகின்ற பாதிப்புகளை விரைந்து தீர்த்திட உயர் நீதிமன்றத்துக்கு இணையான தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். காவிரியின் குறுக்கே பரமத்தி வேலூர் பகுதியில் ஏக்கருக்கு 15 லட்சம் ரூபாய் கட்டண நிர்ணயம்செய்து நீர் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வணிக நோக்கோடு தனியார் நிறுவனங்கள் மோசடி வேளையில் ஈடுபடுகிறது.

பிரதமரைக் கண்டித்துதான் தமிழ்நாடு பாஜக போராட வேண்டும்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பதாகக் கூறியுள்ளார். உண்மையிலேயே போராட்டம் நடத்த வேண்டும் என்றால் பிரதமரைக் கண்டித்துதான் தமிழ்நாடு பாஜக போராட வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் நியமிக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்தோடு காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட வேண்டும். போராட்டம் என்கிற பெயரில் தமிழ்நாடு பாஜக பிரச்சினையை திசைதிருப்ப வேண்டாம்" என்றார்.

இதையும் படிங்க: தேசிய சிறுபான்மையினர் ஆணைய காலியிடங்களை உடனடியாக நிரப்புக- சு.வெங்கடேசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.