ETV Bharat / state

சிறுவன் காணாமல் போன சம்பவத்தில் பலே டிவிஸ்ட்.. 36 மணி நேர பக் பக்!

வேளச்சேரி பகுதியில் காணாமல் போன 16 வயது சிறுவன், 36 மணி நேரத்தில் டெல்லியில் மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன சிறுவன் மீட்பு
காணாமல் போன சிறுவன் மீட்பு
author img

By

Published : Jan 5, 2023, 9:25 AM IST

Updated : Jan 5, 2023, 5:13 PM IST

சென்னை: மடிப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (47). இவருடைய மகன் விஷ்ணு (16) வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2ம் தேதி அன்று பள்ளிக்குச் சென்ற விஷ்ணு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவிலை.

இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணுவின் தந்தை, வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். பள்ளியின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் மடிப்பாக்கம் ராமநகர் பேருந்து நிலையம் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை கைப்பற்றி தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், காணாமல் போன சிறுவன் விஷ்ணு, ஜனவரி 2ம் தேதி மாலை 4 மணி அளவில் ராம் நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்திற்கு சென்றது தெரியவந்தது. மேலும் எம்ஜிஆர் ரயில் நிலையம் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், சிறுவன் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் ஜிடி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து உடனடியாக டெல்லி சென்ற தனிப்படை காவல்துறையினர், ரயில் டெல்லியை சென்றடையும் முன்பே ரயில் நிலையத்திற்கு சென்று காத்திருந்து, நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இறங்கிய விஷ்ணுவை கண்டுபிடித்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இதையடுத்து விஷ்ணுவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், விஷ்ணு வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்டதாகவும், அதற்கு அவரது பெற்றோர்கள் பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு அனுப்பி வைப்பதாகவும் கூறியதாக தெரியவந்தது. இதனை ஏற்க மறுத்த விஷ்ணு youtube மூலம் டெல்லியில் உள்ள தூதரகத்திற்கு சென்று தேர்வு எழுதினால் வெளிநாட்டிற்கு செல்லலாம் என்பதை அறிந்து இவ்வாறு செய்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதையடுத்து விஷ்ணு அவரது வீட்டில் ஒப்படைக்கப்பட்டார். புகார் கொடுக்கப்பட்டு 6 மணி நேரத்தில் சிறுவனை மீட்ட போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார்.

இதையும் படிங்க: ஹரியானா பாலியல் வன்கொடுமை; முன்னாள் அமைச்சர் சந்தீப் சிங்கிடம் விசாரணை

Last Updated : Jan 5, 2023, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.