ETV Bharat / state

திருமணமானதை மறைத்து, இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய இளைஞர் கைது! - Chennai district news

சென்னை: மதுரவாயல் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

லோகேஷ்
லோகேஷ்
author img

By

Published : Aug 11, 2020, 6:50 AM IST

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணுக்கு நேற்று (ஆக.10) வயிற்று வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்குப் பிரசவவலி ஏற்பட்டு இருப்பதாகவும், குழந்தை பிறந்து விடும் என்றும் தெரிவித்தனர்.

இந்தத் தகவலை கேட்டவுடன் அந்தப் பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில், அப்பெண்ணுக்கு சில மணி நேரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, மதுரவாயல் காவல் நிலையத்தில் அப்பெண்ணின் பெற்றோர் இதுதொடர்பாக புகார் அளித்தனர்.

இதையடுத்து பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டபோது புழலை சேர்ந்த லோகேஷ்(24), என்ற நபர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கி விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து மதுரவாயல் காவல் துறையினர் லோகேஷை கைது செய்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் லோகேஷுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் லோகேஷ் மதுரவாயல் வழியாக சென்று கொண்டிருந்தபோது, அவரது மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆனதால், அப்பெண்ணின் வீட்டின் அருகே நின்று தண்ணீர் கேட்டுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணும் தண்ணீர் கொடுத்துள்ளார். அப்போது லோகேஷ் அப்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி வெளியே அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

பிறகு அப்பெண்ணிடம் பேசுவதைத் தவிர்த்துள்ளார். இதற்கிடையில் அந்தப் பெண்ணும் கர்ப்பம் தரித்துள்ளார். இது குறித்து லோகேசிடம் அந்தப் பெண் தெரிவித்தார். ஆனால், லோகேஷ் கர்ப்பத்தை கலைத்துவிடும்படி கூறியுள்ளார்.

ஆனால் இதனை வீட்டில் தெரிவிக்காமலிருந்து விட்டு, வயிற்றில் நீர்க்கட்டி இருப்பதாகக் கூறி சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்போது குழந்தை பிறந்த பிறகு தான் அப்பெண்ணின் பெற்றோருக்கு இத்தகவல் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, லோகேஷ் மீது மதுரவாயல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.