சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. வலிமை படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் (AK 61) நடிக்க உள்ளார். இது இருவரும் மூன்றாவது முறையாகக் கூட்டணி அமைக்கும் படமாகும். இந்தப் படத்தையும் போனி கபூர்தான் தயாரிக்க இருக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்றும் வரும் நிலையில், வரும் மார்ச் 9ஆம் தேதி ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்காக சென்னை அண்ணாசாலை போன்ற செட் ஒன்று ராமோஜி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிய உள்ளதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
மங்காத்தாவிற்கு பின்...
இந்தப் படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் எனவும் அதில் ஒரு வேடத்தில் மங்காத்தா படம் போன்று வில்லன் வேடம் என்றும் கூறப்படுகிறது.
-
Prep mode on #AK61 pic.twitter.com/UOqGUrZwgK
— Boney Kapoor (@BoneyKapoor) February 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Prep mode on #AK61 pic.twitter.com/UOqGUrZwgK
— Boney Kapoor (@BoneyKapoor) February 15, 2022Prep mode on #AK61 pic.twitter.com/UOqGUrZwgK
— Boney Kapoor (@BoneyKapoor) February 15, 2022
அப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் அஜித்தின் புதிய லுக்கை போனி கபூர் வெளியிட்டுள்ளார். அதில், அஜித் வெள்ளை தாடியுடன் வயதான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மெழுகு டால் பிரியங்கா மோகன் புகைப்படத் தொகுப்பு!