சேலம் ரயில் நிலையத்தில் கோவை - சென்னை இன்டர்சிட்டி ரயில் செல்வதற்காக இன்று (செப்.29) காத்திருந்த பயணிகள், தெர்மல் ஸ்கேனர் கொண்டு சோதனை செய்யப்பட்ட பிறகே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த சோதனையின்போது, ரயில்வே காவல் துறை டிஎஸ்பி பாபு, இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி, சேலம் மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் உள்ளிட்டோர் ரயில் நிலையம் முழுவதும் சோதனையிட்டனர்.
அதேபோல சரக்கு சேவை வாகன நிறுத்தும் இடங்களிலும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தினர். பயணிகள் கொண்டு வந்த உடமைகளையும் சோதனை செய்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சேலம் ரயில்வே ஜங்சன் பகுதியில் இந்த சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருப்போரூர் கோயில் சொத்துகளை அளவீடு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!