ETV Bharat / state

நெல்லை ஜெயக்குமார் வழக்கில் மூன்று மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்... செல்வப்பெருந்தகை தகவல்..! - NELLAI JAYAKUMAR CASE

நெல்லை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் வழக்கில் சிபிசிஐடி போலீசார் மூன்று பேரை அடையாளம் கண்டுள்ளனர் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

நெல்லை ஜெயக்குமார், செல்வப்பெருந்தகை
நெல்லை ஜெயக்குமார், செல்வப்பெருந்தகை (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 3:54 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு திட்ட பணிகளை சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப் பெருந்தகை தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பப் பூங்காவில் நடந்து வரும் பல்வேறு பணிகளை சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு செய்தது.

அதனை தொடர்ந்து நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை, '' நாங்குநேரி பகுதியில் அமைந்துள்ள தொழில்நுட்ப பூங்கா தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் ஒரு வழக்கு வெற்றி பெற்ற நிலையில், எம்சிஎல்டி நிறுவனத்திடம் இருந்து 590 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 1,800 ஏக்கர் நிலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் தொழில்நுட்ப பூங்கா செயல்பாட்டிற்கு வரும் அதனைத் தொடர்ந்து தென்பகுதி மக்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள்'' என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், காங்கிரஸ் நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் கேபிகே ஜெயக்குமார் கொலை வழக்கில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விசாரணை தீவிர படுத்த வேண்டும் என குற்றப் புலனாய்வுத்துறைக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இதையும் படிங்க: 'யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை'.. விஜய் கட்சி குறித்த கேள்விக்கு செந்தில் பாலாஜி சட்டென சொன்ன பதில்..!

தொழில்நுட்ப ரீதியான விசாரணையும், அறிவியல் பூர்வமான விசாரணையும் நடந்து வருகிறது. அமைச்சர் கே.என். நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை போன்றே ஜெயக்குமார் வழக்கு இருந்தது. ராமஜெயம் வழக்கை சிபிஐ விசாரித்த நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லாமல் திணறியது. ஆனால், நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வழக்கை சிபிசிஐடி தீவிர படுத்திய நிலையில், வழக்கில் தொடர்புடைய இரண்டு, மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக ஐஜி தெரிவித்துள்ளார். விரைவில் குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள். ஜெயக்குமார் வழக்கில் எடுத்தோம், கவிழ்த்தோம் என யாரையும் குற்றவாளி என சொல்லிவிட முடியாது. விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், இந்தியா கூட்டணியை குறித்து, எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் என சிலர் செயல்பட்டு கருத்துக்களை தெரிவிக்கின்றனர். கூட்டணி வலுவாக உள்ளது. இந்தியா கூட்டணியை சமுத்திரம் போன்றவை. அலைகள் இருக்கத்தான் செய்யும். தேர்தல் நேரத்தில் அலைகள் ஓய்ந்து அமைதி ஏற்படும். மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. வயநாட்டு தேர்தலில் பிரியங்கா காந்தி மிகப்பெரிய வெற்றியை பெருவார். ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநில தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி எங்களுக்கு உறுதியாகி உள்ளது'' என செல்வப்பெருந்தகை கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.