ஐதராபாத்: ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டியின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் திலக் வர்மா 69 இடங்கள் முன்னேறற்றம் கண்டு முதல் முறையாக 3வது இடத்தை பிடித்து உள்ளார்.
சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து 2 சதங்கள் விளாசி தொடர் நாயகன் விருதை திலக் வர்மா வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடரந்து இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 4வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8வது இடத்தில் உள்ளார்.
HARDIK PANDYA BECOMES THE NUMBER 1 RANKED T20I ALL-ROUNDER 🔥
— Johns. (@CricCrazyJohns) November 20, 2024
- The MVP of India....!!! pic.twitter.com/OYhHO4ojJd
ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் முதலிடத்திலும், இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 2வது இடத்திலும் உள்ளனர். ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஹார்திக் பாண்ட்யா மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். முதல் இரு இடங்களில் இருந்த இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன், நேபாளம் வீரர் திபேந்தர சிங் இருவரையும் பின்னுக்குத் தள்ளி ஹர்திக் பாண்ட்யா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் அபாரமாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 39 ரன்கள் விளாசி இக்கட்டான நிலையில் இருந்த இந்திய அணி மீட்டார். அதே ஆட்டத்தில் 3 ஓவர்கள் பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யா வெறும் 8 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து முக்கிய விக்கெட்டை காலி செய்து இருந்தார்.
இதுவே ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் முதலிடத்திற்கு கொண்டு செல்ல உறுதுணையாக அமைந்தது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக ஹர்திக் பாண்ட்யா நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
A return to No.1 for one of India's best in the latest T20I Rankings 👊https://t.co/NpVQN2k53C
— ICC (@ICC) November 20, 2024
அதேபோல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டு சதங்கள் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 17 இடங்கள் முன்னேறி 22வது இடத்தைப் பிடித்து உள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர்கள் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் முறையே 23 மற்றும் 69வது இடத்திற்கு முன்னேறி உள்ளனர்.
பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா 5 இடங்கள் முன்னேறி 3வது இடத்தையும், நாதன் எல்லிஸ் 15 இடங்கள் முன்னேற்றம் கண்டு 11வது இடத்தையும் பிடித்துள்ளனர். தென் ஆப்பிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் 3 இடங்கள் முன்னேறி 9வது இடத்தை பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் கோப்பையை தொடர்ந்து டி20 உலக கோப்பை! பாகிஸ்தான் செல்ல இந்திய அணிக்கு அனுமதி மறுப்பு!