ETV Bharat / state

நெய்வேலி விபத்து: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு

author img

By

Published : Jul 1, 2020, 4:12 PM IST

சென்னை: நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

boiler blast in NLCIL in Neyveli: tn cm announced 3 lakhs fund

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், நெய்வேலியில் உள்ள அனல் மின்நிலையத்தின் அலகு ஐந்தில் இயங்கிக் கொண்டிருந்த கொதிகலன் ஒன்று திடீரென வெடித்ததில், ஆறு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன.

இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றவுடன், தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கவும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தவிட்டுள்ளேன். அதன்பேரில் தொழில் துறை அமைச்சர் எம்.சி சம்பத், மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நபர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கும் தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.