சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், சீன அதிபர் மகாபலிபுரத்தை தேர்வு செய்ததற்கு போதி தர்மர் தான் முக்கிய காரணம். ஆனால் அப்படிப்பட்ட போதி தர்மரை நாம் மறந்துள்ளோம் என்பது வியப்பைத் தருகிறது. எனவே இந்த நிகழ்வுக்கு பின்னராவது மத்திய, மாநில அரசுகள் போதி தர்மர் பெயரில் ஆராய்ச்சி நிலையம், சர்வதேச கலை மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் போதி தர்மர் சிலை நிறுவப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க உள்ளார்கள், அப்படி பிரித்தால் புதிதாக தோன்ற உள்ள மாவட்டத்திற்கு போதி தர்மர் பெயர் வைக்க வேண்டும். நம் நாடு முன்னேற்றம் அடைய எந்த அரசங்கம் எதை செய்தாலும் அதை காங்கிரஸ் கட்சி வரவேற்கும் என்றார்.