ETV Bharat / state

நடிகர் சூர்யாவுக்கு பாஜக எச்சரிக்கை!

சென்னை: புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்து உலகம் முழுவதும் செல்கிறது, பேசுவதற்கு முன் சிந்தித்து பேசவும் என்று நடிகர் சூர்யாவை பாஜக எச்சரித்துள்ளது.

BJP
author img

By

Published : Jul 21, 2019, 12:11 PM IST

பாஜகவின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய கல்விக் கொள்கை பற்றி சரமாரியாக எதிர்மறைக் கருத்துகளை நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சூர்யாவிடம் நான் கேட்கும் சில கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பாரா?

  • முதலில் வரைவுக் கொள்கை 448 பக்கங்களையும் படித்துவிட்டாரா?
  • படித்த பிறகு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டீர்களா? பிறகுதான் இந்தக் கருத்தை தெரிவித்தீர்களா? உங்களுடைய குற்றச்சாட்டுகள் பொய்யானது; மக்களை திசை திருப்புவது என்று குற்றம்சாட்டுகிறேன்.
  • பள்ளிக் கல்வியில் 3, 5, 8ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு அது அநீதி என குரல் கொடுக்கும் நடிகர் சூர்யாவிற்கு அது பாஸ், பெயிலுக்கான தேர்வு இல்லை என்பது தெரியுமா?
  • கடந்த இரண்டு ஆண்டுகளாக 'நீட்' தேர்வு மூலமாக மிகவும் பின்தங்கிய மாவட்டம், பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி, சமச்சீர் கல்வி மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா சூர்யா?

அகரம் ஃபவுண்டேஷன் மூலம் கிராமப்புற மாணவர்களை மருத்துவராக மாற்றியதாக நீங்கள் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளவும், அதை 'நீட்' தேர்வோடு ஒப்பிடுவது உங்கள் அறிவீனத்தை காட்டிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய கருத்து உலகம் முழுதும் உடனே சென்றடையும். எனவே சிந்தித்து உண்மையை உறுதி செய்து கொண்டு பேசவும். இதை வேண்டுகோளாக எடுத்தாலோ, இல்லை எச்சரிக்கையாக எடுத்தாலோ" சரி என்று அதில் கூறியுள்ளார்.

Intro:கனிமொழி கருணாநிதியே விவாதம் நடத்த தயாரா?

நடிகர் சூர்யாவுக்கு பா.ஜ.க. எச்சரிக்கை?Body:

சென்னை,

பா.ஜ.க.வின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய கல்விக் கொள்கை பற்றி இஷ்டத்துக்கு சரமாரியாக எதிர்மறைக் கருத்துக்களை கணிமொழி கருணாநிதியும், நடிகர் சூர்யாவும் தெரிவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு நான் கேட்கும் சில கேள்விகள் - பதிலளிப்பார்களா?
முதலில் வரைவு கொள்கை 448 பக்கத்தையும் படித்து விட்டீர்களா? படித்த பிறகு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொண்டீர்களா? பிறகு தான் இந்த கருத்தை தெரிவிக்கிறீர்களா?

உங்களுடைய குற்றச்சாட்டுக்கள் பொய்யானது - உண்மை இல்லாதது - அரசியல் உள்நோக்கம் கொண்டது , மக்களை திசைதிருப்புவது என நான் குற்றம் சாட்டுகிறேன். இது இல்லை என நீங்கள் மறுத்தால் நான் உங்களுடன் விவாதிக்கத் தயார் - நீங்கள் தயாரா?

புதிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது என்கிற கனிமொழியே - 3 வயதிலிருந்து 18 வயது வரை, அனைத்து ஜாதி, மத, மொழி, மாணவர்களுக்கும் இலவசக் கல்வி என்பது சமூக நீதிக்கு எதிரானதா? எந்தக் காலத்தில் இந்த மாதிரி திட்டத்தை உங்கள் பெரியார் தந்தார்? சொல்ல முடியுமா?

இந்தியை திணிக்கிறார்கள் - நாம் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறீர்களே?
1968 ல் முதலாவது கல்விக் கொள்கையில் கூட மும்மொழிக் கொள்கை இருந்தது. இதில் இந்தி இருந்தது. இதை நீங்கள் இல்லையென மறுக்க முடியுமா? . நேருவின் இரு மொழிக் கொள்கை உத்தரவாதம் என்பது வெறும் வாய்மொழி உத்தரவாதம் தான். இது எழுத்து , சட்டம், கொள்கை பூர்வமான, உத்தரவாதம் இல்லை. இதை நீங்கள் மறுக்க முடியுமா?
1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பலரை பலி கொடுத்து ஆட்சியை பிடித்த அடுத்த ஆண்டு 1967 முதல் நீங்கள் மத்தியில், மாநிலத்தில் ஆண்ட காலங்கள் முழுவதும் மும்மொழிக் கொள்கையும், அதில் இந்தியும் இருந்துள்ளது - இல்லையென உங்களால் மறுக்க முடியுமா?
இப்படி உண்மைகளை முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டு இப்போது இல்லாத இந்திக்கு எச்சரிக்கை விடுவது பம்மாத்து அரசியல் இல்லையா-கனிெமொழி?

பள்ளி கல்வியில் 3 , 5,8ம் வகுப்பில் பொதுத் தேர்வு - அது அநீதி என குரல் கொடுக்கும் நடிகர் சூர்யாவே _ அது பாஸ் , பெயிலுக்கான தேர்வு இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? அது மாணவனுக்கும் என்ன இனி தேவை என்பதை தெரிந்து கொள்ள என்பதும் - பள்ளி பாடத்திட்டத்தில் என்ன மேம்பாடு செய்ய வேண்டும் என அரசு தெரிந்து கொள்ள வைக்கும் தொடர் மதிப்பீடு என்பது உங்களுக்கு தெரியுமா சூர்யா?

அகரம் பவுண்டேஷன் மூலம் கிராமப்புற மாணவர்களை டாக்டராக மாற்றியதாக நீங்கள் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் அதை " நீட்" தேர்வோடு ஒப்பீடு செய்து உங்கள் அறீவினத்தை காட்டிக் கொள்ளாதீர்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக" நீட்" தேர்வு மூலமாக மிகவும் பின்தங்கிய மாவட்டம் பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த அரசு பள்ளி சமசீர் ல்வி மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா சூர்யா?

உங்களுடைய கருத்து உலகம் முழுதும் உடனே சென்றடையும் எனவே ஜாக்ரதையாக பேசுங்கள் உண்மையை உறுதி செய்து கொண்டு பேசுங்கள். இதை வேண்டுகோளாக எடுத்தாலும் எச்சரிக்கையாக நடிகர் சூர்யாக எடுத்தாலும் சரியே என அதில் கூறியுள்ளார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.