ETV Bharat / state

முதல்வர் பங்கேற்றால் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து கருப்பு பலூன் பறக்கவிடுவர் - அண்ணாமலை பேட்டி - en mann en makkal

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக சார்பில் வருகின்ற 28 ஆம் தேதி இராமேஸ்வரத்தில் ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைபயணம் தொடங்கவுள்ளதாக கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

author img

By

Published : Jul 14, 2023, 10:20 AM IST

சென்னை: விமான நிலையத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆகஸ்ட் மாதம் இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் உள்பட 5 நாடுகளின் தென் ஆப்பிரிக்கா கூட்டம் நடக்கிறது. ஜுலை 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி 5 நாடுகளில் உள்ள அரசியல் கட்சிக்கூட்டம் நடக்கிறது. இந்தியாவில் பாஜக கட்சி சார்பில் 4 பேர் கொண்ட குழுவை நட்டா அனுப்புகிறார். அந்த குழுவில் நானும் இருந்தேன்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

அந்த கூட்டத்தில் என்ன பேச வேண்டும் என்பதற்கான ஆலோசனை நடந்தது. வருகின்ற 28 ஆம் தேதி இராமேஸ்வரத்தில் என் மண் என் மக்கள் நடைபயணம் தொடங்க உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். பொதுமக்களும் கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்தோம். இது வரை 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் இந்த நடைப்பயணத்தில் கலந்துக்கொள்ள பதிவு செய்து உள்ளனர். வெப் சைட் மூலமாக ஒன்றரை லட்சத்திற்கும் மேலான நபர்கள் பதிவு செய்து உள்ளனர்.

ஒவ்வொரு தொகுதியிலும் ஒருங்கிணைக்கும் பணி நடக்கிறது. 168 நாளில் 234 தொகுதியிலும் நடைபயணம் தொடர்கிறது. 3வது முறையாக பிரதமர் மோடிக்கு 400 எம்.பிக்களை பெற்று வர வேண்டும் என்பதற்காக இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் பிரதமர் என்ன செய்து உள்ளார் என்ற கருத்துக்கள் மக்களிடம் எடுத்து கூறப்படும். மோடி என்ன செய்தார் என்று கூறும் ஒரு லட்சம் புத்தகங்களை 28 ஆம் தேதி அமித் ஷா வெளியிட உள்ளார்.

கடந்த முறை எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு 2 கட்சிகளாக தேசியவாத காங்கிரஸ் மாறி உள்ளது. சிவசேனாவும் 2 ஆக உடைந்து உள்ளது. எதிர்கட்சிகளின் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்பது மக்களுக்கு தெரியும். இதனால் சின்ன சின்ன உதிரி கட்சிகளையும் சேர்த்து காட்டினால் பலம் இருப்பது போல் காட்டி கொள்ளலாம் என நினைக்கின்றனர். கொள்கை அடிப்படையில் கூட்டணி வந்தால் மக்கள் ஏற்பார்கள்.

சண்டை போட்டு கொள்பவர்கள் மோடியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். பெங்களூரில் நடக்கும் கூட்டத்திற்கு முதலமைச்சர் சென்று வரும் நாளில் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து இருப்பார்கள். தென் ஆப்பிரிக்காவில் நானும் கருப்பு சட்டை அணிந்து இருப்பேன். கருப்பு பலூன் பறக்க விடப்படும். காவேரி நீரை கேட்டு பெறும் வரை கர்நாடக முதலமைச்சர், துணை முதலமைச்சரை கண்டிக்கும் போராட்டம் தொடரும்.

தேர்தல் கமிஷன் அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்பட அவர் கீழ் உள்ள நிர்வாகிகளை அங்கீகரித்து உள்ளது. எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளராக உள்ளதால் அவருடன் கூட்டணி வைத்துள்ளோம். ஜனாதிபதி விழா, ஜி20 கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். 18 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கும் அழைக்கப்பட்டு உள்ளார். மற்றொரு உட்கட்சி பிரச்சனையில் பாஜக தலையிடாது.

அது எங்கள் பிரச்சனை இல்லை” என்றுக் கூறினார். பெங்களூருவில் நடக்கும் எதிர்கட்சிகள் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “திமுக தலைவராக சென்றால் கவலை இல்லை. ஆனால் முதலமைச்சராக செல்வதால் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன குரலை பதிவுச் செய்ய வேண்டும். முதலமைச்சர் தமிழக உரிமையை மீட்க தயாராக இல்லை. சந்தர்ப்பவாத காங்கிரஸ் கூட்டணியை வைத்து கொண்டு மோடியை எதிர்க்க சமயம் பார்க்கிறார்.

தமிழக விவசாயிகள் நலனை பார்க்கவில்லை. முதலமைச்சர் வரும் போது மக்களின் கோபத்தை காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றுக் கூறினார். மேலும் பேசிய அவர், “பொது சிவில் சட்டத்தை பொறுத்த வரை மக்களுக்கு இன்னும் புரிதல் வர வேண்டும். அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றும் போது பேசியதை படிக்க வேண்டும். பொது சிவில் சட்டத்தின் வரைவு யாரிடமும் இல்லை. சட்ட வரைவு போடும் போது என்ன என்று தெரிய வரும்.

மத்திய அரசு பொது சிவில் சட்டத்தில் யாரையும் சிறுமைப்படுத்த போவது கிடையாது. கிறிஸ்துவர்களுக்கு கணவன் மனைவி சொத்தில் மாற்றம் வரும். இஸ்லாமிய பெண்களுக்கு சொத்துரிமை வரும். இதை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் யாரை புண்படுத்துகிறது. எந்த சமுதாய நல்லண்ணத்தை கெடுக்கிறது என்பதை சொல்ல வேண்டும்.

முதலமைச்சர் உள்பட எல்லாரும் பொது சிவில் சட்டத்தை தவறாக புரிந்து கொண்டு உள்ளனர். 1991 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டே பொது சிவில் சட்டத்தை ஏன் அமல்படுத்தவில்லை என கேள்வி எழுப்பி உள்ளது. பொது சிவில் சட்டத்தின் முதல் வரைவு வரும் வரை காத்திருக்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு என்ன உள்ளது. சொத்து விவகாரத்தில் என்ன செய்யப்படுகிறது. யாருக்கு எதிராக சட்டம் இருக்காது. எந்த மதத்திற்கு பின்னடைவு வரும் என்பதை எதிர்ப்பவர்கள் சொல்ல வேண்டும்.

பொது சிவில் சட்டம் யாருக்கும் எதிரானது கிடையாது. வரைவு வரும் போது இது அனைவருக்குமான சட்டம் என தெரிய வரும். முதலமைச்சரிடம் சந்திக்க நேரம் கேட்டு உள்ளோம். நாளை வரை காத்திருப்போம். நாளை (15ஆம் தேதி) வெள்ளை அறிக்கை மக்கள் மத்தியில் சம்ர்ப்பிக்கப்படும். வெள்ளை அறிக்கை, ஆளுநரிடம் தரப்படும். முதலமைச்சர் வேறு தேதி தந்தாலும் காத்து இருப்போம். வெள்ளை அறிக்கையை பார்த்து விட்டு நடைமுறைப்படுத்த முடியாது என கூற முடியாது.

பாஜக வெள்ளை அறிக்கையின் படி 75 சதவீத டாஸ்மாக் கடைகள் மூடும் போது 3 ஆண்டுகளில் ரூபாய் 33 ஆயிரம் கோடி முதல் 39 ஆயிரம் கோடி வருமான இழப்பை ஈடுகட்ட யோசனை தரப்பட்டு உள்ளது. போதைப் பழக்கத்தை தடை செய்வது, வேலை இழப்பு, கள்ளுக்கடை போன்ற விவரம் கொண்ட வெள்ளை அறிக்கை தரப்படும். அமைச்சர் முத்துசாமி 90 மில்லி தர வேண்டும் என சொல்லும் போது ஐஏஎஸ் அதிகாரிகள் சிரித்து கொண்டு உள்ளனர். தமிழ்நாடு அரசின் சந்திக்கும் திறனை பார்க்க வேண்டும்.

90 எம்எல் பாட்டில் தந்ததால் தமிழக சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வராது. பீர் பாட்டில்களை பள்ளி மாணவர்கள் கொண்டு செல்கின்றனர். வேலைக்கு காலையில் செல்பவர்கள் குடித்து விட்டு போக வேண்டும் என அமைச்சரே சூசகமாக சொல்கிறார். வருவாய் பெருக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பாஜகவின் வெள்ளை அறிக்கைக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உதவி செய்து உள்ளனர். வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என தகவல்கள் தந்து உள்ளனர்” என்றுக் கூறினார்.

இதையும் படிங்க: என்னைப் போன்று ராகுல் காந்திக்கும் நீதி கிடைக்கும் - எம்எல்ஏ பழனி நாடார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.