ETV Bharat / state

பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சௌதாமணி கைது! - sowdhamani BJP

பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் செளதாமணியை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சௌதாமணி கைது!

author img

By

Published : Jul 9, 2022, 3:09 PM IST

சென்னை: ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பான செய்தியை மத சாயம் பூசி மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம், தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

அதே நேரம் ஆக்கிரமிப்பில் உள்ள கிறித்துவ தேவாலயம் இடிக்கப்படவில்லை என ஒருவர் பேசி பகிர்ந்த காணொலியை, தமிழ்நாடு பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணி, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததாக அளிக்கப்பட்ட புகாரில் தனியாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் முன் ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த இரு முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையின் போது காவல்துறை தரப்பில், வினோஜ் செய்தியை பகிர்ந்ததை தாண்டி அரசின் செயல்பாட்டை தேர்தல் நடவடிக்கைகளுடனும், மதத்தை தொடர்புபடுத்தியும் விமர்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதே போல் சௌதாமணியின் டுவிட்டர் பகிர்வு மதக்கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வினோஜ் பி.செல்வத்திற்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், சௌதாமணியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கலகத்தை உண்டு செய்தல், மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் சௌதாமணி மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சௌதாமணியை சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணைக்குப் பின், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணிகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு தமிழ்நாடு அரசை பாராட்டுகிறேன்’ - புகழேந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.