ETV Bharat / state

"தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் ஊழல்" ஆளுநரிடம் அண்ணாமலை புகார்! - bjp state chief Annamalai

தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் திட்டத்தில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

Annamalai
Annamalai
author img

By

Published : Nov 29, 2022, 1:06 PM IST

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: "தமிழகம் வந்த பிரதமரின் பாதுகாப்பில் தமிழக அரசு மெத்தனப்போக்காக இருந்ததுள்ளது. துணை ராணுவ வீரரை தொலைபேசியில் மிரட்டிய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தில் பல நூறு கோடி முறைகேடு நடந்துள்ளது. ஆன்லைன் ரம்மி தொடர்பாக ஆளுநர் ஒப்புதல் தந்த பிறகும் அவசரச் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தாமல் இருந்தது ஏன்? என்பது உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை ஆளுநரிடம் வழங்கியதாக அண்ணாமலை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, "ஆளுநரிடம் 2 முக்கிய விஷயங்களை கோரிக்கையாக வைத்தோம். ஜூலை 29, 2022-ல் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு பிரதமர் சென்னை வந்தார். அப்போது பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய தமிழக அரசு தனது பணியில் இருந்து தவறியது. 180 நாடுகளைச் சார்ந்த நபர்கள் அந்நிகழ்வுக்கு வந்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் மாநில அரசின் பல 'மெட்டல் டிடெக்டர்' வேலை செய்யவில்லை, பராமரிப்பற்ற மெடல் டிடெக்டர் பயன்பாட்டில் இருந்தது. பிரதமர் வந்து சென்ற பிறகு மத்திய அரசு, பிரதமருக்கான பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி மாநில அரசுக்கு கடிதம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.

அதன் பிறகு மாநில உளவுத்துறை பிரதமருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு இருந்தது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை குற்றம்சாட்டி கடிதம் அனுப்பியிருந்தனர். பிரதமர் பாதுகாப்பில் தவறிழைத்தோர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள மெட்டல் டிடெக்டர்களை ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். உலகில் அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நபர் நமது பிரதமர். மாநில அரசு அவரது பாதுகாப்பில் மெத்தனமாக இருந்துள்ளது.

பிரதமரின் வெளி பாதுகாப்பு வளையம் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். பிரதமரை சுற்றியுள்ள உள் பாதுகாப்பு வளையம் மட்டுமே எஸ்பிஜி(SPG) பாதுகாப்பில் இருக்கும். காவல்துறை உயரதிகாரிகள் அரசியல் கட்சியை சார்ந்து வேலை செய்கின்றனர். முதலமைச்சர் இமேஜ் management-ல் மட்டுமே மாநில உளவுத்துறை கவனமாக இருக்கிறது. கோவை கார் வெடிப்பை தற்போது வரை குண்டு வெடிப்பு என சொல்ல திமுகவினர் கூச்சப்படுகின்றனர் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஜல் ஜீவன் திட்டத்தில் 69 லட்சம் குடிநீர் இணைப்பிற்கு மத்திய அரசு தமிழக அரசுக்கு நிதி வழங்கியுள்ளது. இதில் பல நூறு கோடி முறைகேடு நடந்துள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை குறிப்பிட்டு ஆதாரப் பூர்வமாக ஆளுநரிடம் ஊழல் தொடர்பாக மனு அளித்துள்ளோம். 40% வரை முறையற்ற இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி தொடர்பாக எங்களது கருத்தை ஆளுநரிடம் வலியுறுத்தினோம். ஆன்லைன் தடை குறித்த தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் வழங்கிய ஒப்புதலை தமிழக அரசு அமல்படுத்தாமலேயே இருந்தது. ஆளுநரிடம் கையெழுத்து வாங்கிவிட்டு அரசாணையை வெளியிடாமல் இருந்தனர். ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தில் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றது.

சைபர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இது தொடர்பாக மாநில அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டு உள்ளார். தவறாக இயற்றப்பட்ட சட்டம், சட்டமே இயற்றப்படாததற்கு சமம் என நீதித் துறையில் சொல்லப்படும்.
ஆளுநர் தமிழக அரசின் சட்டம் முறையாக இயற்றப்பட்டுள்ளதாக என ஆராய்த்துதான் முடிவு எடுக்க முடியும். பொத்தம் பொதுவாக ஆளுநர் கையெழுத்து போடவில்லை எனக் கூறுவது தவறு. தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது.

செல்போனில் proxy sercer இருந்தால் மாநில அரசின் தடையையும் மீறி ஆன்லைன் சூதாட்டம் விளையாட முடியும், பிட்காயின் போன்றவற்றை பயன்படுத்த முடியும். துணை ராணுவ வீரரை மிரட்டும் செயலில் சில அரசியல் கட்சியினர் இறங்கியுள்ளனர். மாநில அரசு உடனடியாக துணை ராணுவ வீரர் குருமூர்த்தி குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கியது பாராட்டத்தக்கது. அவரிடம் தேசவிரோத எண்ணத்துடன் ஆபாசமாக பேசியவர்களை மாநில அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்றார்.

மேலும், “எதிர் கட்சி தலைவராக இருந்தபோது சட்டமன்றத்தில் சட்டை கிழிந்த பிறகு ஓடி வந்தது ஆளுநரிடம் முறையிட்டார் ஸ்டாலின். அவர் தந்தையார் பஞ்சாப் சிங்கம் என ஆளுநரை பேசியிருந்தார். இது போன்ற பழைய சரித்திரங்களை கனிமொழி பார்த்து பேச வேண்டும். இப்போது வார்த்தை மாற்றி திமுகவினர் பேசுவதை ஏற்க முடியாது . seasonal politician ஆக கனிமொழி இருக்கிறார். ஆளுநர் பதவி தேவையில்லாத பதவி என்றால் திமுகவினர் எதிர்கட்சியாக இருந்தபோது பெட்டி பெட்டியாக ஊழல் புகார் குறித்த பண்டல்களை எடுத்து வந்து ஆளுநரிடம் புகாரளித்தது ஏன்..? எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் ராஜ் பவன் முன்பே எப்போதும் இருந்தார்" என கூறினார்.

இதையும் படிங்க: இது தனி வழி.. சென்னை விமான நிலையத்தில் இனி போக்குவரத்து நெரிசல் ஏற்படாது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.