ETV Bharat / state

தமிழ்வழியில் பொறியியல் கல்வி: எல்.முருகன் வரவேற்பு - opportunity to study Engineering

பொறியியல் இளநிலை படிப்புகளை தமிழில் கற்கவும், தமிழிலேயே தேர்வு எழுதவும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சில் முடிவு செய்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' - AICTE யின் முடிவுக்கு எல்.முருகன் வரவேற்பு

author img

By

Published : May 29, 2021, 10:13 PM IST

இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பொறியியல் இளநிலை படிப்புகளை தமிழில் கற்கவும், தமிழிலேயே தேர்வு எழுதவும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சில் முடிவு செய்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. தொழில்நுட்பக் கல்வியை தாய்மொழியில் கற்கிற பொழுது தமிழை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் அதன் நுட்பத்தை நன்கு அறிந்து, தெரிந்து படிக்கவும், தேர்வு எழுதவும் முடியும்.

கிராமப்புறம், அரசுப் பள்ளி மாணவர்கள் இனி பொறியியல் படிப்புகளில் தயக்கமின்றி சேர்ந்திட முன்வருவார்கள். ஆங்கிலம் முழுமையாகத் தெரியாத காரணத்தினால் பொறியியல் படிப்புகளில் சேர முன்வராத மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியானதாகும். இதன் மூலம் பொறியியல் கல்லூரிகளிலும் கூடுதல் மாணவர்கள் சேர்ந்து கல்வி கற்கும் வாய்ப்பு உருவாகும்.

பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து கொண்டே வரும் நிலையில், இந்த அறிவிப்பால் மாணவர் சேர்க்கையும் அதிகமாகும். ஏற்கனவே ஆரம்பப்பள்ளி படிப்புகளில் தாய்மொழிக் கல்வியை தேசிய கல்விக் கொள்கை வழங்கியுள்ளதில் மகிழ்ச்சி அடைந்தோம். இப்போது எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது போல பொறியியல் இளநிலை படிப்புகளை தமிழில் கற்கும் வாய்ப்பை அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ந்து வரவேற்கத்தக்கது" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி : ராமதாஸ் வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.