சென்னை: மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “முதலமைச்சரால் கொண்டு வரப்பட்ட மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
அதே தீர்மானத்தில் மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம் என்றே கூறப்பட்டுள்ளது. இது மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்குப் பொருந்தாது என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். 2 வயது குழந்தையிலிருந்து செல்ஃபோன் பயன்படுத்துகிறார்கள்.
மாநில அரசு மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டுமே தவிர இதுபோன்ற சூழலில் முட்டுகட்டை போடுவதை மாநில அரசு நிறுத்த வேண்டும். ஐஐடி, ஐஐஎம், போன்ற கல்வி நிலையங்களில் தேசிய அளவில் நுழைவுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு, தமிழ்நாடு மாணவர்களுக்கு எதிரானது போன்ற பிரம்மையை மாநில அரசு ஏற்படுத்தி வருகின்றது” என்றார்.
இதையும் படிங்க: சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியது செல்லும் - நீதிமன்றம் தீர்ப்பு