தமிழ்நாட்டிலிருந்து கொங்கு மண்டலத்தை பிரித்து, புதுச்சேரி போல, தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்போவதாக வதந்தி பரவியது. இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
இது குறித்து பாஜக ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் , “தமிழ்நாட்டை இரண்டு மாநிலமாக பிரிக்க வேண்டும் என்பதும், அது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது என்பதும் பாஜகவின் நிலைப்பாடு அல்ல“.
“இதுகுறித்து தமிழ்நாடு பாஜக கட்சியின் மாநில தலைவரோ அல்லது பொதுச்செயலாளரோ அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் வெளியிடவில்லை. எனவே தனிப்பட்ட எண்ணங்களை கட்சியின் கருத்தாக பாஜக கூட்டங்களில், பத்திரிகைப் பேட்டிகளில், சமூக வலைதளங்களில் யாரும் தெரிவிக்க வேண்டாம்“.
“கொங்கு நாடு என்பது பாஜக கருத்து அல்ல. வளமான தமிழ்நாடு; வலிமையான பாரதம் என்பது தான் பாஜகவின் லட்சியம். நம்முடைய நல்லெண்ணங்களை, சிந்தனைகளை, கருத்துகளை யாரும் திரித்து வெளியிட்டு, சமூகவலைத்தளங்களின் செயல்படும் தமிழின விரோத சக்திகள் மக்களை குழப்புவதற்கு இடம் தரவேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எதிர்காலத்தில் அரசியல் பிரவேசம்- ரஜினி பேட்டி!