ETV Bharat / state

MK Stalin: முதலமைச்சரை காப்பாற்ற திமுக கூட்டணி கட்சிகள் முயற்சிப்பது ஏன்? - வானதி சீனிவாசன் கேள்வி!

author img

By

Published : Apr 25, 2023, 12:59 PM IST

திமுக அரசின் முடிவுகளுக்கு தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பு எழும்போதெல்லாம், திமுகவின் கூட்டணி கட்சிகள் முதலமைச்சரை காப்பாற்ற முயற்சிப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

Vanathi
வேலை

சென்னை: தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த சட்ட முன்வடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் மது பரிமாற சிறப்பு அனுமதி வழங்கும் அரசாணைக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த அரசாணையில் ஆட்சேபனைக்குரிய சிலவற்றை மாற்றம் செய்து திருத்தப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு அரசாணையில் திருத்தம் செய்ததை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று(ஏப்.25) வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களை விநியோகிக்க சிறப்பு அனுமதி அளிக்கும் அரசாணையை, ஒரே நாளில் தி.மு.க., அரசு திரும்பப் பெற்றுள்ளது. அதுபோல, 12 மணி நேரம் வேலை சட்டத்தையும் நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இது போல ஓர் அறிவிப்பை, ஓர் உத்தரவை ஓர் அரசாணையை வெளியிட்டுவிட்டு திரும்பப் பெறுவது ஏற்கனவே நடந்திருக்கிறது. திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளுக்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது. திருமண மண்டபங்களில், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களுக்கு அனுமதி என்ற முடிவை, தமிழ் கலாசாரத்தை நன்கறிந்த ஒருவரால் நிச்சயமாக எடுத்திருக்கவே முடியாது. ஏழை, நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை அறிந்திராத ஓர் அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதற்கு இந்த அரசாணையே சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ் மக்களிடம் ஏற்பட்ட கடும் கொந்தளிப்பு, திமுக அரசை பணிய வைத்திருக்கிறது.

ஒரு பக்கம் சட்டப்பேரவையில் 500 மதுக்கடைகளை குறைப்போம் என்று அறிவித்துவிட்டு, மறுபக்கம் மதுவை ஆறாக ஓட விடும் திட்டத்தை அறிவித்து, மக்களை முட்டாள் ஆக்க நினைத்துள்ளது திமுக அரசு. இது தகவல் தொழில்நுட்ப புரட்சி யுகம். இப்போது எந்தவொரு ஏமாற்று வேலையும் மக்களிடம் எடுபடாது. உண்மையை ஒரு நொடியில் மக்கள் உணர்ந்து விடுவார்கள்.

திமுக அரசின் முடிவுகளுக்கு தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பு எழும்போதெல்லாம், முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்து விட்டது என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முயற்சித்து வருகின்றன. இதற்காக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுப்பது, கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து முதலமைச்சருக்கு வக்காலத்து வாங்குவது என்று ஒரு நாடகத்தை ஒவ்வொரு முறையும் அரங்கேற்றி வருகின்றனர்.

வரும் மக்களவை தேர்தலில் திமுகவிடம் இருந்து அதிக தொகுதிகளை பெற வேண்டும், கடந்த மக்களவை தேர்தலைப் போலவே திமுகவிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற வேண்டும் என்ற கவலை, திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக மக்களை ஏமாற்ற நினைத்தால், அது இனி எடுபடாது. முதலமைச்சருக்கு தெரியாமல் நடந்து விட்டது என்றால், தமிழகத்தில் உள்ள திமுக அரசு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறதா? அல்லது வெளியில் இருந்து வேறு சில சக்திகள் அரசை இயக்குகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின்தான் பதில் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு; வலுத்த எதிர்ப்பால் முதலமைச்சர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.