ETV Bharat / state

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து: சிறப்பு நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி சேகர் மறுப்பு! - Defamation of female journalist

SV Shekar: பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நடிகர் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

Bjp leader sv sekar refuse all allegations against him in special court
எஸ்.வி.சேகர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 9:10 PM IST

சென்னை: கடந்த 2018-ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கையும், நெல்லையில் எஸ்.வி.சேகர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளையும் 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி.சேகர் மற்றும் அவருக்கு எதிராக நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கோபால்சாமி ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

அப்போது எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டு குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு எஸ்.வி.சேகர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இதைத்தொடர்ந்து மனுதாரரிடம், எஸ்.வி.சேகர் தனது பதிவை நீக்கி விட்டதாகவும், மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் சொல்கிறாரே, நீங்கள் ஏன் வழக்கை தொடர விரும்புகிறீர்களா? என நீதிபதி கேட்டார். அதற்கு மனுதாரர் கோபால்சாமி வழக்கை தொடர இருப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பு சாட்சி விசாரணைக்காக வழக்கை அக்டோபர் 19-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சரை அவதூறாகப் பேசிய அதிமுக மாஜி எம்எல்ஏ மீது வழக்கு.. மன்னிப்புக் கேட்டதால் ஜாமீன் வழங்கிய நீதிபதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.