சென்னை: அமெரிக்க சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (அக்-13) தமிழ்நாட்டிற்கு திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசுகையில், “பாஜக என்ற ஒரு கட்சி தமிழ்நாட்டில் இல்லை என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அதே திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது பாஜகவை எதிர்க்கட்சியாக அவரே நினைக்கிறார்.
முதலமைச்சருக்கு இரண்டு விதமான பயம் வந்துள்ளது. முதலில் அவருடைய கட்சியில் யார் என்ன செய்வார்கள் என்றும், இரண்டாவது பயம் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி, இவை இரண்டும் சேர்த்து அவரின் தூக்கத்தை கெடுப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.
1980ஆம் ஆண்டு இந்தி என்பது கட்டாயம் என காங்கிரஸ் கட்சி கொள்கையாக வைத்திருந்தார்கள். 2020ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு பிறகு தான் கமிட்டி அமைத்து மத்திய அரசு மூலம் இந்தி மொழிக் கொள்கை எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்தனர். இந்தி மொழியை முழுமையாக பயன்படுத்தும் மாநிலம் "A" பிரிவாகவும், பாதி அளவு பயன்படுத்தப்படும் மாநிலம் "B" பிரிவாகவும், முழுமையாக பயன்படுத்தாதது “C” பிரிவாக உள்ளது. அதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
அட்டவணை 8 இருக்க கூடிய மொழிகள் மட்டும்தான் இந்தியாவின் அதிகாரபூர்வமான மொழிகள். இந்தியாவில் எந்த தேர்வாக இருந்தாலும் அட்டவணை 8 இருப்பது போல தான் நடத்த வேண்டும். இல்லாத ஒரு பிரச்சினையை எடுத்து ஆளும் கட்சியின் மீது இருக்கக்கூடிய மதிப்பை கெடுத்துக் கொள்கிறார்கள், அண்ணாமலை தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தேர்வாது ஹிந்தியில் எழுத வேண்டும் என்று கட்டாயமாக சொன்னால் அதை ஒருபோதும் தமிழ்நாடு பாரத ஜனதா கட்சி ஏற்காது.
திமுக மக்களுக்கு தேவையான அரசியலை செய்ய வேண்டும் தேவையில்லாத பொய்யான விஷயத்தை விட்டுவிட்டு மக்களுக்கு சாதகமாக ஆட்சி நடத்த வேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் பிரதமரை பொறுத்தவரை எல்லா குரு பூஜைகளுக்கும் தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதிலும் குறிப்பாக வருகிற 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி என்பதால் அதற்கும் வருவதற்கு ஆசைதான்.
ஆனால் பிரதமர் வரும் நிகழ்ச்சிகளை இரண்டு மாதத்திற்கு முன்னதாகவே அறிவிக்கப்படும் 30 ஆம் தேதி பிரதமர் சென்னை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை தவறான செய்தி பரவி வருகிறது. அடுத்த ஆண்டு குரு ஜெயந்திக்கு இங்கு வருவதற்கு அவருக்கு பரிதுரை செய்கிறோம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு எப்பொழுதும் பாஜக தயாராகிவிட்டது, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைக்கவும் மக்கள் தயாராகி விட்டார்கள் அதனுடைய தாக்கம் தான் முதலமைச்சர் தற்போது உளறிக் கொண்டிருப்பது முதலமைச்சர் சொன்னது மாதிரி திமுகவின் முதல் எதிரி பாஜக தான்.
அதேபோன்று பாஜகவின் முதல் எதிரி திமுக தான் திமுக அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முதன்மை வேண்டுகோள் முதலில் உங்கள் முதலமைச்சரை உறங்க விடுங்கள் பாரத ஜனதா கட்சி வளரும் போது முதலமைச்சரின் தூக்கம் இன்னும் கெடும் அதனால் தான் சொல்கிறேன் அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் முதலமைச்சரை தூங்குவதற்கு வாய்ப்பு கொடுங்கள்.
திமுகவின் அமைச்சர்களுக்கு ஜாதிவன்மம் இருக்கிறது அதனால் தான் ஒரு அமைச்சர் ஜாதி பெயரை வைத்து கூப்பிடுகிறார், அவர்கள் அழைக்கும் தோரணையை பார்த்தாலே தெரியும் அவர்கள் மிட்டா மிராசு ஆட்சி செய்கிறார்கள்” எனக் கூறினார்.
இதையும் படிங்க:ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் - காரணம் என்ன?