இதுகுறித்து நமது ஈ-டிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், "கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருபவர்களுக்கு அங்கீகாரம் அளித்து பட்டா வழங்கப்போவதாக தமிழ்நாடு அரசு நேற்று உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னர்கள், ஆன்மீக அன்பர்கள் கோயில்களுக்கு நிலங்களை தானமாக வழங்கி தர்ம காரியங்களுக்கு பயன்படவேண்டும் என்று எழுதி வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதனை மீட்டு அதன்மூலம் கோயிலுக்கு வருவாய் ஈட்டுவதே அரசாங்கத்தினுடைய கடமையாக இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு அரசு அங்கீகாரம் வழங்கப்படும் என்று மனு தாக்கல் செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
நீங்கள் இப்படி செய்வது ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போவதாக உள்ளது என்று நீதிபதிகளே கூறியுள்ளனர். பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு விட்டுக்கொடுப்பது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்.
இதனால்தான் அரசாங்கம் ஆலயங்களை விட்டு வெளியேறி ஆன்மீக அன்பர்களிடத்தில் நிர்வாகத்தை கொடுக்கவேண்டும் என்று கூறுகிறோம். ஆன்மீக அன்பர்கள் நிர்வகித்தால் இதுபோன்ற நிலை ஏற்படாது. உயர் நீதிமன்றம் இதுகுறித்து அளிக்கும் முடிவை பொருத்து எங்களின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் இருக்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: முகமூடித் திருடர்கள் உலாவரும் வைரல் சிசிடிவி காட்சி!