ETV Bharat / state

வசூல் வேட்டையில் திமுக அமைச்சர்கள் இருவர்?: பாஜக ஐடி பிரிவு தலைவர் குற்றச்சாட்டு

என் மீது போடப்பட்ட வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும்; இரண்டு அமைச்சர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் பாஜக மாநிலத் தகவல் தொழில் நுட்பப் பிரிவுத் தலைவர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Nov 2, 2022, 8:07 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகைக்கு, அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உறுதி அளிக்காததால் அவரது வருகை இந்த ஆண்டு தள்ளிப்போனதாக சி.டி.ஆர்.நிர்மல் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக மொகிந்தர் அமர்நாத் என்பவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

இப்புகார் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கடந்த மாதம் 14ஆம் தேதி சி.டி.ஆர்.நிர்மல் குமார் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கலகம் செய்யத்தூண்டுதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டரீதியாக எதிர்கொள்வேன்: இந்நிலையில் இந்த வழக்குத்தொடர்பாக, சி.டி.ஆர் நிர்மல் குமாரிடம் பல்வேறு விளக்கங்கள் கேட்கவுள்ளதால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். குறிப்பாக, இன்று (நவ.2) காலை 11 மணிக்கு சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் அலுவலகத்தில் ஆஜராக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

என் மீது போடப்பட்ட வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் - பாஜக ஐடி பிரிவு தலைவர்

வசூலில் அமைச்சர்களா? மத்திய குற்ற போலீசார் முன்பு ஆஜரான பிறகு, நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'என் மீது போடப்பட்டுள்ள வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன். தற்போது அமைச்சரவைவில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி, 'கரூர் கம்பெனி' என்ற பெயரில் வசூல் செய்து வருகிறார்.

அதேபோன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, '22 கலெக்சன் பாயிண்ட்' வைத்து வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலரிடம் புகார் செய்துள்ளேன். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகி முறையிடுவோம்' என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'நான் பெரிய ரவுடி.. வீடும் ஸ்கூலும் எனக்குத்தான்..' தம்பதியை மிரட்டிய பாஜக நிர்வாகி சூர்யா சிவா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.