குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும் அதை பற்றி தவறாக தகவல் பரப்புபவர்களை கண்டித்தும் பாஜக சார்பில் சென்னை விருந்தினர் மாளிகை முதல் கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது, இல.கணேசன் தலைமையில் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், பொது மேடைகளில் இந்து கடவுள், மதத்தை கொச்சை படுத்தி தொடந்து பேசி வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கவும், வன்முறை தூண்டும் விதத்தில் நடத்தப்படும் போராட்டங்களுக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, ரஜினிகாந்த் கருத்து பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், டெல்லி சட்டம் ஒழுங்கு முழுவதும் மாநில அரசிடம் இல்லை என்பதால் மத்திய அரசு டெல்லி கலவரம் தொடர்பாக தீவிரமாக விசாரிக்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும், திமுக, காங்கிரஸ் கட்சிகள் வாக்கிற்காக அரசியல் செய்து வருகின்றனர். இஸ்லாமியர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்றார்.
இதையும் படிங்க: தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி: அதிமுக நல்ல முடிவை தருவார்கள்